ஹஜ் புனித யாத்திரை செல்வதற்கான ஏற்பாடுகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், ஹஜ் கமிட்டியும் இணைந்து செய்து வருகிறது.
இந்த ஆண்டு சென்ற மாதம் 16-ந்தேதி முதல் ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் இந்தியாவில் இருந்து மொத்தம் 1,36,020 பேர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 1,00,020 பேர் ஹஜ் கமிட்டி மூலமாகவும், 36,000 பேர் தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலமாகவும் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஹஜ் புனித பயணத்தின் போது 21 பேர் உயிரிழந்துள்ள தாகவும், அதில், 20 பேர் இயற்கை மரணமாகவும், ஒருவர் மட்டும் சாலை விபத்தில் மரணமடைந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இயற்கை மரண மடைந்தவர்களில் 19 பேர் மூச்சு திணறல் மற்றும் மாரடைப்பால் உயிரிழந்ததாக விபரங்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.