கவனமின்மை காரணமாக பழங்குடியின பெண்ணின் 3 குழந்தைகள் உயிரிழப்பு!

கேரளாவில் பழங்குடியின பெண்கள் எதிர்க்கொண்டு வரும் மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் கவனக்குறைபாடு காரணமாக பழங்குடியின பெண்ணின் 3 குழந்தைகள் பிறந்து இறந்தது.


கேரளா மாநிலம் மன்னன்தாவடியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் புதன் கிழமை காலை 6:30 மணியளவில் 27வயது பழங்குடியின பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் அங்கிருந்த டாக்டர்களை கோழிக்கோடு மருத்துவமனைக்கு பரிந்துரைசெய்து உள்ளனர். பழங்குடியின பெண்ணின் நிலையானது மிகவும் மோசமான அந்த சூழ்நிலையில் வெறும் 1 மணிநேரங்களில் பரிந்துரையை டாக்டர்கள் செய்து உள்ளனர். 

மருத்துவமனையில் இருந்த மகப்பேறு மருத்துவமனை மருத்துவர் சுஷ்மா அவருக்கு சிகிச்சை அளிக்காமல் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்து உள்ளார். 

வாலாத்தில் உள்ள பழங்குடியின காலனியில் வசிக்கும் பெண் உடனடியாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு உள்ளார். 
 
ஆனால் ஆம்புலன்ஸ் பனாமரம் அருகே சென்றதும் பெண்ணுக்கு பிரசவம் ஆக தொடங்கிவிட்டது. உடனடியாக பெண் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். 

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. உனடியாக அவர் கால்பெட்டாவில் உள்ள துலாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். 

 பின்னர் ஆம்புலன்ஸ் காம்பாலாக்காட்டை அடைந்ததும் பெண்ணுக்கு மற்றொரு குழந்தை பிறந்து உள்ளது. குழந்தை வெறும் 400 கிராம் எடையே இருந்து உள்ளது. குழந்தை பிறந்த உடன் இருந்துவிட்டது. 

பின்னர் ஆம்புலன்ஸ் துலாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும் மற்றொரு குழந்தை பிறந்து உள்ளது. அந்த குழந்தையும் வெறும் 600 கிராம் எடையுடன் பிறந்து, அந்த உடனே இறந்துவிட்டது. 

இதற்கிடையே பனாமரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழைந்தை ஆம்புலன்ஸில் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

குழந்தை வியாழன் கிழமை காலையில் இறந்துவிட்டது. பெண்ணிற்கு மூன்று இடங்களில் பிரசம் பார்க்கப்பட்டு உள்ளது. 3 குழந்தைகளும் இறந்துவிட்டது. 

மாவட்ட அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ ஒரு லட்சம் கொடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. முதல் மருத்துவமனையிலே பெண்ணுக்கு மருத்துவம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. 

மருத்துவம் அளிக்காமல், பெண்ணை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த மருத்துவர் சுஷ்மா, மாவட்ட மருத்துவ அதிகாரிகளின் சந்தேகத்திற்கு இடமானோர் வரிசையில் உள்ளார். 
Tags:
Privacy and cookie settings