ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக, துபாயில் இருந்து, நாடு கடத்தப்பட்ட, அப்ஷா ஜபீன், 37 என்ற இந்திய பெண், ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டார்.
அவருடன், கணவர் தேவேந்தர் பத்ரா என்ற முஸ்தபா மற்றும் மூன்று மகள்களையும் போலீசார் கைது செய்தனர். அப்ஷா ஜபீன் பின்னணி குறித்து, போலீசார் திடுக்கிடும் தகவலைதெரிவித்துள்ளனர்.
அவருடன், கணவர் தேவேந்தர் பத்ரா என்ற முஸ்தபா மற்றும் மூன்று மகள்களையும் போலீசார் கைது செய்தனர். அப்ஷா ஜபீன் பின்னணி குறித்து, போலீசார் திடுக்கிடும் தகவலைதெரிவித்துள்ளனர்.
அதன் விவரம்:
அப்ஷா ஜபீனுக்கு, நிக்கோலே நிக்கி ஜோசப், நிக்கி, நிக்கோலே, ஆயிஷா, என பல பெயர்கள் உண்டு. சிறுவயதில், பெற்றோருடன் அபுதாபி சென்ற அப்ஷா ஜபீன், அங்கு பள்ளிப் படிப்பை முடித்ததும், இந்தியா திரும்பியுள்ளார்.
ஐதராபாத்தில் ஷாதன் கல்லுாரியில் பட்டப் படிப்பை முடித்த பின்,முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, அவர், குடும்பத்துடன் துபாயில் 'செட்டில்' ஆகியுள்ளார்.
அங்கு தான் அவருக்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிக்கி ஜோசப் என்ற பெயரில், பிரிட்டன் பிரஜை என்று கூறிக் கொண்டு,
சமூக வலைதளமான 'பேஸ்புக்'கில், கணக்கு துவக்கியுள்ளார். அதன் மூலம், சிரியாவைச் சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

அப்ஷா ஜபீன் விரித்த வலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் பீகார்மாநிலங்களைச் சேர்ந்தஇளைஞர்கள் விழுந்துள்ளனர்.
அப்படி சிக்கியவன் தான், ஐதராபாத்தைச் சேர்ந்த, சல்மான் மொகிதீன். அப்ஷா ஜபீன், இங்கிலாந்தில் வசிப்பதாகக் கருதி, அவரது வலையில் விழுந்த சல்மான்,
துபாய், துருக்கி வழியாக, சிரியா சென்று, ஐ.எஸ்.,சில் சேர திட்டமிட்டிருந்தான்.
துபாய், துருக்கி வழியாக, சிரியா சென்று, ஐ.எஸ்.,சில் சேர திட்டமிட்டிருந்தான்.
இது குறித்த ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, இந்தாண்டு ஜனவரியில், ஐதராபாத்தில் இருந்து துபாய்க்கு விமானம் ஏற இருந்த, சல்மானை, போலீசார் கைது செய்தனர்.
அவனை விசாரித்ததின் அடிப்படை யில், அப்ஷா ஜபீன், பிரிட்டன் பிரஜை இல்லையென்பதும், அவர், துபாயில் இருந்து இயங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த விவரங்கள், ஐக்கிய அரபுஎமிரேட்சுக்கு வழங்கப்பட்டன. அதன் அடிப்படையில், அப்ஷா ஜபீன், துபாயில் இருந்து, குடும்பத்துடன் நாடு கடத்தப்பட்டார்.
அவர், ஐதராபாத் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும், கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.