ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள். அந்த பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் சர்வதேச சந்தைகளில் கிறிஸ்டியன் மற்றும் யாஷ்டி இன பெண்களை செக்ஸ் அடிமைகளாக விற்று வருகின்றனர்.
ஜீனன் 9 வயது 18 என்ற யாஷ்டி பெண் இன பெண் இஸ்லாமிய அரசு ஜிஹாதிகளிடம் பிடிபட்டு 3 மாதம் கைதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பினார்.
அவர் தனக்கு ஏற்பட்ட சோதனைகள் குறித்து ஒரு புத்தகம் எழுதி உள்ளார் பாரீசில் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடபட்டது இதற்கு ஜீனனுக்கு பிரஞ்ச் பத்திரிகையாளர் தியர்லி ஒபர்லே உதவி செய்து உள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஷ்டி இன சிறுபான்மையினர் வாழும் வடக்கு பகுதியில் அந்த பெண்ணை கைது செய்து உள்ளனர்.
ஜினன் 2 மனிதர்களால் பல வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார்.அவர்கள் மத குரு மற்றும் ஒரு போலீஸ்காரர் ஆவார்கள்.
மற்ற யாஷ்டி இன கைதிகள் வீடுகளில் அடைக்கபட்டு இருந்தனர். தன்னை அவர்கள் மதம் மாறுமாறு கூறி கொடுமை படுத்தினர்.நான் மறுத்த போது அவர்கள் என்னை அடித்தனர்.
வெயிலில் என்னை இரும்பு சங்கிலி கொண்டு கட்டி போட்டனர். செத்த எலி கிடந்த தண்ணீரை என்னை குடிக்குமாறு கூறினர். சில சமயம் அவர்கள் எனக்கு எலக்ட்ரி ஷாக் கொடுப்பதாக பயமுறுத்தினர்.
அவர்கள் மனிதர்களே அல்ல, அவர்களுக்கு மரணமடைவதற்கும், கொலை செய்வது குறித்து மட்டுமே எண்ணினர்.
தொடர்ந்து அவர்கள் போதை மருந்தை பயன்படுத்தினர். அவர்கள் ஒவ்வொருவரையும் எதிரியாக கருதி பழிவாங்க எண்ணினர். ஒருநாள் இஸ்லாமிய அரசு இந்த உலகத்தை ஆட்சி செய்யும் என கூறினர்.
ஜீனன் புத்தகத்தில் மொசூல் நகரில் நுற்றுகணக்கான பெண்கள் பெரிய வீடுகளில் அடைத்து வைக்கபட்டு இருந்ததாக அவர் கூறி உள்ளார்.
எங்கள் பின்புறம் கிள்ளியும், எங்களை கேலி செய்து சிரித்து, அவர்களுக்கு இடையில் நாங்கள் வினியோகிக்க பட்டோம்.
அவர்களுக்கு இடையில் ’டேஷ் அடிமை’ (Daesh's Slave) என எங்களை அரேபியில் சுருக்கமாக் அழைத்தனர். என ஜீனன் அதில் எழுதி உள்ளார்.
எங்களை விற்பனை செய்யும் போது ஒருவன் இவளுக்கு பெரிய மார்பகங்களாக உள்ளது.
ஆனால் எனக்கு நீல நிற கண்களை உடைய வெள்ளை தோல் உடைய யாஷ்டி பெண் தான் வேண்டும் என. அவர்கள் தான் அழகாக இருப்பார்கள்.
அதற்காக நான் என்ன விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக ஒரு தீவிரவாதி கூறியதாக எழுதி உள்ளார்.
அடிமை சந்தைகளில் பெண்களை வாங்குவதற்கு ஈராக்கியர், சிரியன்ஸ், மேற்கத்தியவர்கள் என பலர் இருந்தனர்.
சிறந்த அழுகு உடைய பெண்களை அநத பெண்ணின் உரிமையாளர் அல்லது வளைகுடா நாடுகளில் உள்ள பண்க்காரர்கள் முன் பதிவு செய்து வைத்து விடுவர்.
பெண்கள் காலநடைகளை போல் விற்கபட்டனர் என எழுதி உள்ளார்.
நான் எனது அழகியை உங்களின் பெரெட்டா துப்பாக்கிக்காக உங்கலீடம் கொடுகிறேன் நீங்கள் விரும்பினார் 133 ஈரோ அல்லது தினாராக வழங்கலாம் என ஒரு வியாபாரி கூறினார்.
2 முறை விறகபட்ட ஜின்ன ஒரு முறை தனது அருகே தனது உரிமையாளர்கள் இருவரும் பேசி கொண்டதை கேட்டு உள்ளார். அவர்கள் பேசி கொண்டதை ஜீனன் அந்த புத்தகத்தில் விவரித்து உள்ளார்.