என்னது... சன்னி லியோன் கவர்ச்சி நடிகையா...?

1 minute read
இப்படி கேட்டு ஒட்டு மொத்த உலகத்தையும் பேரதிர்ச்சியில் தள்ளியிருப்பவர் வடகறி படத்தின் இயக்குனர் சரவண ராஜன். ஜெய், ஸ்வாதி நடிக்கும் வடகறி படத்தின் சந்தை மதிப்பை அதிகப்படுத்த சன்னி லியோனை ஒரேயொரு பாடலுக்கு ஆட வைத்தனர்.
 
உள்ளூரில் ஆட வைத்தால் விஷயம் லீக் ஆகிவிடும் என்பதால் பாங்காக்கில் குறிப்பிட்ட பாடல் காட்சியை எடுத்தனர். 

இதுபோன்ற செயல்களுக்கு பாங்காக்கை போல பக்காவான இடம் வேறில்லை. பொதுவாக பாடல் காட்சியை படமாக்குகையில் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களும், நடன இயக்குனரும், கேமராமேனும், இயக்குனரும் மட்டுமே செல்வார்கள். 

பலநேரங்களில் இயக்குனர்கூட செல்வதில்லை. பாடல் காட்சிதானே... நடன இயக்குனரே அனைத்தையும் எடுத்துவிட்டு திரும்பிவிடுவதுதான் வழக்கம். வடகறி விவகாரமே வேறு. 

ஆடுவது சன்னி லியோன் என்பதால் படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அவரது நண்பர்கள் வட்டம் என்று கும்பலாக கிளம்பியிருக்கிறார்கள். 

ரஜினி, கமலுடன் போட்டோ எடுக்க ரசிகர்கள் ஆர்வப்படுவதைப் போல சன்னி லியோனுடன் அனைவரும் விரும்பி போட்டோ எடுத்துக் கொண்டனர். 

சரித்திரத்தில் நாமும் இருக்க வேண்டுமே. இவ்வளவு களேபரங்களுக்குப் பிறகு, சன்னி லியோனை ஏன் தேர்வு செய்தீர்கள் அவர் பலான நடிகையாச்சே என்று கேட்டதற்கு இயக்குனர் சரவண ராஜன் சொன்ன என்னது... சிவாஜி செத்துட்டாரா பதில்தான் இது. 

என்னது... சன்னி லியோன் கவர்ச்சி நடிகையா? சரவண ராஜன் அந்த மாதிரி வெப்சைட் எல்லாம் பார்க்க மாட்டாராம். அதனால் சன்னி லியோன் அந்த மாதிரி நடிகை என்பது தெரியாதாம். 
சன்னி லியோன் எந்த மாதிரி நடிகை என்பதைத் தெரிய தினத்தந்தி படித்தால் போதுமே. இன்னொரு செய்தி. சன்னி லியோனை ஆட வைக்கலாம் என்று ஐடியா தந்ததே தயாநிதி அழகிரிதானாம். செம ரசனை பாஸ் உங்களுக்கு.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings