ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மிட்சுயி கார்டன் யோட்சுயா என்ற ஹோட்டலில் பெண்கள் மனம் விட்டு கதறி அழுவதற்கு என பிரத்தியேக அறைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
ல்வேறு பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்படும் பெண்கள் மனம் விட்டு அழுவதற்குக் கூட வழியில்லாமல் இருப்பார்கள்.
இது போன்றவர்கள் இங்கு அறை எடுத்துக் கொண்டு கதறி அழுது விட்டுச் செல்லலாம்.
மனம் துக்கமாக இருக்கிறது ஆனால் அழுகையே வரவில்லை என்பவர்களுக்குக் கூட கண்ணீர் விட வைக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளன.