சீனா ஏவிய பலே கண்காணிப்பு செயற்கைக்கோள் !

பூமியை கண்காணிக்கும் அதிதுல்லியமான செயற்கைக்கோளை, சீனா செவ்வாயன்று வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் செலுத்தியது.
சீனா ஏவிய பலே கண்காணிப்பு செயற்கைக்கோள் !
காவோபென் - 2 என்ற இந்த செயற்கைக்கோள், வடக்கு சீனாவில், சான்சி பிராந்தியத்தில் உள்ள டாயுவான் செயற்கைக்கோள் ஏவும் மையத்திலிருந்து, சீன நேரப்படி காலை 11:15 மணிக்கு ஏவப்பட்டது. 

சீன அரசியல் வரலாற்றில் முக்கியமான, 'நெடும் பயண'த்தை குறிக்கும் வகையில், 'லாங் மார்ச்- - 4பி' என, பெயரிடப்பட்ட ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

சீனா ஏவிய செயற்கைக்கோள்களிலேயே காவோபென் - 2 தான் மிகவும் அதி துல்லியமான கேமராக்களை கொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள். 

இதன் மூலம் பூமியின் எந்தப் பகுதியையும் ஒரு மீட்டர் துல்லியத்துடன் கண்காணிக்க முடியும். அதுவும் முழு வண்ணத்தில்!
புவியியல் மற்றும் இயற்கை வளங்களை ஆராய்வது, சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் பருவநிலை மாற்றத்தை அளப்பது, விவசாயத்தை மேம்படுத்துவது, 

ரிடர் மேலாண்மை மற்றும் நகர்புற திட்டமிடல் ஆகியவை தான் காவோபென் - 2வை ஏவியதன் நோக்கம் என்று சீன அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்தது.

என்றாலும், உள்நாட்டு உளவு மற்றும் அண்டை நாட்டு கண்காணிப்பு ஆகியவற்றில் இது சீன ராணுவத்திற்கு பக்க பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Tags:
Privacy and cookie settings