தொடர்ந்து இயக்கிய எல்லாப் படங்களும் வெற்றிப்படங்களாக இருந்தாலும் அந்தப்படங்கள் எல்லாமே தெலுங்கு ரீமேக் படங்கள் தான்.
இதனாலேயே ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜாவுக்கு ரீமேக் ராஜா என்கிற பட்டம் தானாக வந்து ஒட்டிக் கொண்டது. மீடியாக்கள் கூட ரீமேக் ராஜா என்றே அவருக்கு அடைமொழி கொடுத்து செய்திகளை எழுதி வந்தன.
சினிமாவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை ஒட்டிக்கொண்டிருந்த அந்த அடைமொழியை தனது தனி ஒருவன் படத்தின் மூலம் தூக்கி, தன்னாலும் சொந்தமாக கதையெழுதி ஜெயிக்க முடியும் என்று நிரூபித்து விட்டார் இயக்குநர் ஜெயம் ராஜா.
கடந்த வாரம் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீசான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ராஜாவின் சொந்தக் கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் தடவையாக சொந்தமாக யோசித்து கதையெழுதி ஒரு படத்தை இயக்கியிருக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொன்ன ராஜா
இந்தப்படத்தில் தனது பெயரை மோகன் ராஜா என்று மாற்றியிருந்தார். அந்தப் பெயர் சென்டிமெண்ட்டும் சேர்ந்து படத்தை ஹிட்டாக்கியுள்ளது.
இப்போது விஷயம் என்ன தெரியுமா? வழக்கமாக ஜெயம் ராஜா தான் தெலுங்குப் படங்களை தமிழில் ரீமேக் செய்வார். இப்போது அவருடைய தனி ஒருவன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவி வருகிறது.
தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான பி.வி.பி சினிமாஸ், கீதா ஆர்ட்ஸ், சூப்பர் குட் பிலிம்ஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் ஆகியவை இந்தப்படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்க போட்டி போட்டு வருகின்றனவாம்.
இதில் ஜெயிக்கப் போவது யார் என்கிற தகவல் இன்னும் ஒரு வாரத்துக்குள் தெரிந்து விடும். உண்மையான உழைப்பு என்றைக்குமே ஜெயிக்கும்!