வரும் மார்ச் 2016க்குள் இந்தியாவில் 100 நகரங்களின் வீதிகளிலும் வீடுகளிலும் எல்.இ.டி., விளக்குகளை பொருத்தும், 'பிரகாஷ் பாத் யோஜனா' திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
குறைந்த மின் செலவில், அதிக வெளிச்சத்தை தரக்கூடியவை எல்.இ.டி., விளக்குகள். இவை அதிக ஆயுள் உள்ளவையும்கூட.
ஆனால், 'இந்திய மின்சார பயன்பாடுகளுக்கு ஏற்ற தர நிர்ணயத்தை அரசு உருவாக்கி, அதையே எல்லா எல்.இ.டி., விளக்கு தயாரிப்பாளர்களும் கடைபிடிக்கும்படி செய்யாட்டால்,
எல்.இ.டி., விளக்குகளால் முழுமையான பயன் கிடைக்காமல் போகலாம்' என்று மின் விளக்குகளை தயாரிக்கும் பிலிப்ஸ் நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் ஹர்ஷ் சிடாலே தெரிவித்தார்.
'எல்.இ.டி.,யிற்கான தர நிர்ணயத்தை எல்லோருக்கும் கட்டாயமானதாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் கூறினார். இணையத்தின் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய பிலிப்ஸ் ஹ்யூ என்ற எல்.இ.டி., விளக்குகளை பிலிப்ஸ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.