ஃபேஸ்புக்கில் லைக் செய்ய சொல்லி ஏமாற்றும் வேலை !

நீங்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா? "1 என கமெண்ட் செய்யுங்கள்; என்ன நடக்கிறதென்று பாருங்கள்" என்றோ, "லைக் செய்து, என்ன நடக்கிறதென்று பாருங்கள்" போன்ற வாசகங்கள் தாங்கிய இணைப்புகளைப் பார்த்திருக்கிறீர்கள்? 
 
அதில் என்ன இருக்கிறதென்று பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் நீங்கள் கிளிக் செய்வீர்கள். எதுவும் நடக்காது. திரும்பவும் சில முறைகள் முயற்சிப்பீர்கள். அப்போதும் எதுவும் நடக்காது. 

'நாம்தான் தவறாக கிளிக் செய்துவிட்டோமோ?' என்று யோசிப்பீர்கள். எதுவுமே நடக்காது. நீங்களும், உங்களைப் போன்றவர்களும் பலமுறை தவறாக கிளிக் செய்ததாலும், கமெண்ட் செய்ததாலும், அந்தப் பதிவு வைரலாகி இருக்கும். 

நீங்கள் லைக், கமெண்ட் செய்திருக்கிறீர்கள்கள் என்று உங்கள் நண்பர்களின் டைம்லைனிலும் தோன்றி அவர்களை எரிச்சலடைய வைக்கும். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமான பதிவுகளும் ஃபேஸ்புக்கில் உலவி வருகின்றன. 

"என்னுடைய சகோதரிக்கு இதயத்தில் புற்றுநோய், எனது தோழிக்கு கேன்சர், உதவுங்கள்!" என்ற வாசகத்தோடு, மருத்துவமனையில் இருக்கும் ஒரு பெண்ணின் படமும் அதில் இருக்கும். 

ஒரு முறை கேத்தி என்னும் மன வளர்ச்சி குறைவான குழந்தையின் புகைப்படம் வேறு ஒரு போலிப் பெயரில், வேறு விதமான நோயில் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனவும், அவருக்கு உதவ வேண்டும் எனவும் கேட்கப்பட்டிருந்த பதிவு வைரலாகி இருக்கிறது. 

அதைக் கண்ட கேத்தியின் பெற்றோர் அப்படியே உறைந்து போயினர். எதற்காக இப்படிச் செய்கின்றனர்? ஃபேஸ்புக்கின் நிரலாக்கம் அதிகப்படியான லைக் மற்றும் கமெண்டுகளை ஒட்டியே அமைந்திருக்கிறது. 

லைக்குகளும், கமெண்டுகளும் அதிகமாக அதிகமாக, ஃபேஸ்புக்கும் அதே போஸ்டை மேலும் பிரபலப்படுத்தும். அதனாலேயே இத்தகைய பதிவுகள் அதிகரிக்கின்றன. 

இப்போழுது வரைக்கும், ஒரு பக்கமோ, பதிவோ அதிகப்படியான லைக்குகள் பெற்றால் அதில் எவ்வித நிதி சம்பந்தமான பயனும் இல்லை. ஆகவே அடுத்த முறை, அந்த மாதிரியான புகைப்படங்களைப் பார்த்தால், அதைக் கண்டுகொள்ளாதீர்கள். 



இல்லை அத்தகைய மாயங்களில் இன்னும் நம்பிக்கை இருந்தால், உங்களின் பக்கத்தில் அதைப் பகிருங்கள். முடியவில்லையா, உங்கள் ஃபேஸ்புக் வைரஸால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்டுவிட்டது என்று நினைத்துக்கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள். 
Tags:
Privacy and cookie settings