கேரளாவில் மலையாள நடிகைகளின் ஆபாச படங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கமலஹாசனின் பாபநாசம் படத்தில் நடித்த மலையாள
நடிகை ஆஷாசரத்தின் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது. இது பற்றி ஆஷாசரத் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து அவரது ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றியதாக கேரள வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிரேமம் படத்தில் நடித்த இன்னொரு நடிகையான அனுபமா பரமேஷ்வரனின் ஆபாச படங்களும் இப்போது இணையதளத்தில் உலவுகிறது.
இதை அறிந்த நடிகை அனுபமா அதிர்ச்சி அடைந்தார். இணையதளத்தில் வெளியான படங்கள் போலியானவை என்று புகார் கூறிய அவர் இது பற்றி போலீசில் புகார் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார்.