மினாவில் ஹஜ் புனித யாத்திரையின் போது பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு 717 பேர் பலியானதற்கு யாத்திரிகர்களிடம் கட்டுப்பாடு இல்லாததே காரணம் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் கலீத் அல்-ஃபாலி தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது.
யாத்திரிகர்கள் எங்களது அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கடைபிடித்திருந்தால் நிச்சயம் இத்தகைய பெருந்துயரம் நிகழ வாய்ப்பில்லை.
நாங்கள் கால-அட்டவணை அமைத்துக் கொடுத்தோம், ஆனால் அவர்கள் அதன் படி நடக்கவில்லை.
இதுதான் இத்தகைய பெரும் விபத்துக்கு மூல காரணம். எங்களது கால-அட்டவணைப்படி அவர்கள் சென்றிருந்தால் நிச்சயம் இத்தகைய விபத்துகள் தவிர்க்கப்படக் கூடியதே என்று கூறியுள்ளார்.
விபத்து குறித்து விசாரணைக்கு உத்தர விட்டுள்ள முகமது பின் நயீஃப் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தி யுள்ளார்.