எச்.ஐ.வி என்ற வைரஸ் மூலம் பரவும் கொடிய நோய் எய்ட்ஸ். இந்த நோய் கண்டறியப்பட்ட காலத்தில் இது தொற்று நோயாக இருக்கக் கூடும் என
அஞ்சப்பட்டதால் எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் பல நாடுகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
சிங்கப்பூரிலும் எய்ட்ஸ் நோய் உள்ள வெளிநாட்டினர் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை கடந்த 20 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது எய்ட்ஸ் நோய் மீதான தவறான கண்ணோட்டம் மாறி எய்ட்ஸ் நோய் குணப்படுத்தக் கூடிய ஒன்று என்பது தெரிய வந்துள்ளது.
இதையொட்டி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் சிங்கப்பூரில் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டு உள்ளது.
எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் அனைவரையும் போல சிங்கப்பூர் வந்து செல்லலாம்.
இருந்த போதிலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் சிங்கப்பூருக்குள் தங்கியிருக்க முடியும்.
நீண்ட காலம் தாங்கி படிப்பது, வேலை செய்வது போன்றவற்றிற்கான தடை நடைமுறையில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.