அமெரிக்க கல்வியாளர் சார்லஸ் வில்லியம் எலியட், ‘புத்திசாலி வழக்கறிஞர்கள் தமது நிலையான நண்பராக புத்தகங்களை வைத்திருப்பர்’ என்றார்.
இதே கருத்தினை மனதில் வைத்து ஈரான் நாட்டிலுள்ள நீதிபதி காசெம் நகிஸாதே என்பவர் செயல்படுவதாக தோன்றுகிறது.
ஈரான் நாட்டின் வட கிழக்கு பகுதியிலுள்ள கோன்பேட் இ காவுஸ் நகர நீதிமதி காசெம், ‘குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவதால், அவர்களது குடும்பத்துக்கும் அவர்களுக்கும்,
ஏற்படும் உளவியல் மாற்றங்களை புத்தகம் படிப்பது தடுக்கும் என நம்புவதால் அவர்களுக்கு புத்தகங்களை வாங்கி படிக்கும் வித்தியாசமான தண்டனை வழங்கப்படுகிறது’ எனத் தெரிவித்தார்.
குற்றவாளிகள் தமது சொந்த செலவில், 5 புத்தகங்கள் வாங்கிப் படித்து அதைப் பற்றிய குறிப்பையும் எழுத வேண்டும் எனவும்,
இத்துடன் நபிகளின் பொன்மொழிகளில் அந்த புத்தகத்தின் கருத்துக்கு பொருந்தும் விதமான கருத்தை குறிப்பிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள் தாம் படித்து முடித்த புத்தகங்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிறைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புத்தகத்தை தொடர்ந்து படித்து வரும் கைதிகள் சண்டைகளில் ஈடுபடுவது குறைந்து உள்ளதாகவும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
எனினும், இந்த தண்டனைகள், இளம் வயது முதல் குற்றத்தில் ஈடுபடுவோருக்குள் மாற்றம் ஏற்படுத்துமே தவிர எல்லோரையும் சரிசெய்ய உதவுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.