தமிழில் ‘காதல் அழிவதில்லை. காதல் கிசுகிசு, லாடம்’ போன்ற படங்களில் நடித்தவர் சார்மி. தற்போது விக்ரமுடன் ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். சார்மியை தனியார் அமைப்பு ஒன்று ஐதராபாத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தது.
இதில் கலந்துகொள்ள அவர் கவர்ச்சி உடை அணிந்து சென்றார். கூட்டத்தினர் சார்மியை பார்த்ததும் ஆட்டோகிராப் கேட்டு நெருங்கினர். ஒரு ரசிகர் செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு அருகில் சென்றார்.
சார்மியும் அதனை அனுமதித்து செல்பிக்கு போஸ் கொடுத்தபடி ரசிகருடன் நெருங்கி நின்றார். அப்போது அந்த ரசிகர் அத்துமீறி திடீரென்று சார்மியின் கையை பிடித்தார்.
கட்டி அணைக்கவும் முயன்றார். சார்மி ஆவேசமாக அந்த ரசிகரை தள்ளிவிட்டார். தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக விருந்தை ஏற்பாடு செய்தவர்களிடம் புகார் செய்தார்.
இதையடுத்து அந்த ரசிகரை பிடித்து சிலர் அடித்து உதைத்தனர். பதிலுக்கு அவரும் திருப்பி அடித்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு அந்த ரசிகர் வெளியே விரட்டப்பட்டார்.
இந்த சம்பவம் சார்மிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு அவசரமாக புறப்பட்டுச்சென்றுவிட்டார்.