அமெரிக்காவின் பிரபல நிறுவனமான அமேசன் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ள பெண்களுக்கான லெக்கின்ஸ் (leggings) ஆடைகளில்
இந்து கடவுள்களின் உருவப் படங்கள் இடம் பெற்றுள்ளதால் பெரும் சர்ச்சை தோன்றியுள்ளது.
குறித்த நிறுவனத்தின் லெகின்ஸ் ஆடைகளில் இந்து கடவுள்களான விநாயகர், சிவன், இராமர், கிருஷ்ணர், சரஸ்வதி ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இது உலக அளவில் வாழும் வரும் இந்திய மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகளவில் வாழும் இந்துக்கள் இந்த ஆடைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமேசன் நிறுவனம் இந்த சர்ச்சைக்குரிய ஆடைகளின் விற்பனையை நிறுத்தியுள்ளது.