குழந்தையின் தலை மாட்டி கொண்டு உயிர் விட்ட இளம் பெண்!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஹேமந்த். இவரது மனைவி கீதா தேவி (வயது 23) கர்ப்பமாக இருந்தார். கடந்த சனிக்கிழமை வயிறு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் உடல் மட்டும் வெளியே வந்தது குழந்தையின் தலை மாட்டி கொண்டது.
 
இந்த நிலையில் குழந்தையின் தலையை  வெளியே எடுக்க முடிய வில்லை வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதியுங்கள் என டாக்டர்கள் கூறியதை தொடர்ந்து தேவி வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். 

அங்கு குழந்தையின் தலை நீண்ட போரட்டத்திற்கு பின் எடுக்கபட்டது. ஆனால் அங்கு கீதா தேவி மரணம் அடைந்தார்.

 இது குறித்து கணவர் ஹேமந்த் கூறும் போது:-

இந்த தவறு டாக்டர் கவன குறைவாலேயே ஏற்பட்டது. முதல் நாள் குழந்தையின் உடல் வெளியே வந்தது தலை உள்ளே மாட்டி கொண்டது. பின்னர் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல் என எங்களை கைவிட்டு விட்டார்கள். 

லோக்கல் மருத்துவமனையில் குழந்தையின் தலையை வெளியே எடுத்தனர் ஆனால் எனது மனைவி இறந்து விட்டாள் இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ஷாஜகான்பூர் துணை போலீஸ் சூப்பிரெண்டு கே.ஜி.யாதவ் கூறியதாவது:-

அந்த மருத்துவமனையில் சிக்கலான நேரங்களில் சமாளிக்க போதுமான கருவிகள் இல்லை. மருத்துவமனையில் போதுமான ஏற்பாடுகள் செய்யபடவில்லை அதனால் தான் வேறு மருத்துவமனைக்கு சிபாரிசு செய்து உள்ளனர். 

சிக்கலான சூழ்நிலையை சமாளிக்கும் திறமை அங்குள்ள டாக்டர்களுக்கும் இல்லை. அவர்களின் அலட்சியத்தால்  குழந்தையின் தலை தாயாரின்  வயிற்றில் சிக்கி கொண்டது.

பிரசவம் பார்த்த டாக்டர்களின் பெயரும் அந்த குடும்பத்தாருக்கு தெரியவில்லை.அந்த நேரத்தில் டூட்டியில் யார் இருந்தார் எனவும் தெரியவில்லை.ஆனால் விசாரணை தொடங்கி விட்டது குற்றவாளி யார் என கண்டு பிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

இது கொடூரமான அலட்சியம் இந்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக மாவட்ட மாஜிஸ்திரேட் ஷுபாரா சக்ஸ்சேனா உத்தரவிட்டு உள்ளார்.
Tags:
Privacy and cookie settings