நடிகையுடன் லிப் டு லிப் கோபத்தில் வெளியேறிய ஹீரோ மனைவி!

‘நான் ஈ’ படத்தில் ஹீரோவாக நடித்தவர் நானி. தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியது: என் மனைவி அஞ்சனா. நான் நடித்த ‘ஆஹா கல்யாணம்’ படத்தை அவருக்கு அழைத்துச் சென்று காட்டினேன்.
 
ஹீரோயினுடன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நான் நடித்திருந்தேன். அதைப்பார்த்ததும் என் மனைவி கோபம் அடைந்து தியேட்டரைவிட்டு வெளியேறிவிட்டார். 

செல்லமாக கோபித்துக்கொள்கிறார் என்று நினைத்தேன். ஆனால் மேற்கொண்டு அந்த படத்தை அவர் பார்க்க மறுத்துவிட்டார். 

அந்த சூழலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்தேன். படம்பற்றி பல்வேறுவிதமாக பேசப்பட்டாலும் அதைவிட அதிகமாக என் மனைவியை நினைத்துதான் வருத்தப்பட்டேன். என் இமேஜே உடைந்ததுபோல் உணர்ந்தேன்.

இந்த சம்பவத்துக்குபிறகு இனிமேல் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிப்பதில்லை என்று முடிவுக்கு வந்தேன். சில ஹீரோக்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற காட்சிகளை அவர்களது மனைவிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பக்குப்பட்டவர்களாக நடந்துகொள்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings