சிருஷ்டி டாங்கேயுடன் முத்த காட்சியில் நடிக்க மறுத்த கதாநாயகன்

1 minute read
சின்னத்திரையில் அது இது எது நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வரும் மா.கா.பா ஆனந்த் தற்போது சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
 
மா.கா.பா.ஆனந்த்-ருஷ்டி டாங்கே ஜோடியாக நடிக்க, 'நவரச திலகம்' என்றபெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. 

இது காதலும், நகைச்சுவையும் கலந்த படம். படத்தை பற்றி அதன் டைரக்டர் காம்ரன் கூறுகிறார்:- ”ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒரு இளைஞனை பற்றிய கதை இது. 

அந்த இளைஞராக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே மருத்துவ கல்லூரி மாணவியாக வருகிறார். இருவரும் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள்? என்பதே திரைக்கதை.

இரண்டு பேரும் சம்பந்தப்பட்ட ''கொள்ள அழகுக்காரி போறாளே முன்னால'' என்ற பாடல் காட்சியை தென்காசி, குற்றாலம் பகுதியில் படமாக்கினோம். படத்தில், ஒரு முத்த காட்சி இடம்பெற இருந்தது. அந்த காட்சியில் நடிக்க சிருஷ்டி டாங்கே தயாராக இருந்தார். 

மா.கா.பா.ஆனந்த் நடிக்க மறுத்ததால், அந்த முத்த காட்சி படமாக்கப்படவில்லை. படத்தில் கவர்ச்சி நடனம், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இல்லை. பாக்யராஜ் பாணியில் குடும்ப பின்னணியில் நகைச்சுவையாக கதை சொல்லப்பட்டு இருக்கிறது. 

கருணாகரன், ஜெயப்பிரகாஷ், இளவரசு, மகாதேவன், மீராகிருஷ்ணன் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுதர்சன வெம்புட்டி தயாரிக்கிறார்.'' 
Tags:
Today | 13, November 2025
Privacy and cookie settings