ஐக்கேமேசோ டான்ஷி என்கிற நிறுவனம், பெண்களுக்கு சேவை செய்வதற்காக தற்போது ஆறு ஆண்களை பணியமர்த்தியுள்ளது.
சோகமாக, மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் இந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தங்களுக்கு வேண்டிய ஆளைத் தேர்வு செய்து ஆர்டர் செய்யலாம்!
சோகமான படங்களை ஒன்றாக பார்ப்பதில் தொடங்கி, அந்தப் பெண் அழுதால் கண்ணைத் துடைத்து விடுவது வரை
அனைத்து சேவைகளுக்கும் சேர்த்து ஏழாயிரத்து அறுநூறு யென் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் நான்காயிரம்) கட்டணமாக வசூலிக்கப் படுகின்றது.
இந்த ஆறு ஆண்களில் ஒருவர் பல்தேய்க்கும் பிரஷுடன் போஸ் கொடுத்திருக்கிறார். காரணம்! பல் மருத்துவர்கள் எப்போதுமே அன்பாக பழகுவார்கள் அல்லவா? அதனால்தான்.
பாவம்! பெரிய வேலைகளில் உள்ள ஜப்பானிய பெண்களுக்கு சாய்ந்து அழக்கூட ஆளில்லாமல் போய் விட்டது போல! இவர்களது அதீத வேலைப் பளு இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டது போலும்!
ஆண்களுக்கு இதுபோன்ற சேவை எதுவும் தற்போதைக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.