பள்ளி மைதானத்தில் உடலுறவு கொண்ட மாணவர்கள் !

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பள்ளி மைதானம் ஒன்றில் 14 வயது மாணவ, மாணவி இருவர் உடலுறவில் ஈடுபட்டு அதனை செல்போனில் பதிவு செய்து அனைவருக்கும் பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பள்ளி மைதானத்தில் உடலுறவு கொண்ட மாணவர்கள் !
சுவிஸின் Neuchatel மண்டலத்தில் உள்ள பெயர் வெளியிடப்படாத பள்ளியில் தான் இந்த சம்பவம் அரங்கேறி யுள்ளது. 

கடந்த வாரம் விடுமுறையின் போது பள்ளி மைதானத் திற்கு வந்த 14 வயது மாணவ, மாணவர் இருவரும் உடலுறவில் ஈடுபட் டுள்ளனர். 

இதனை அவர்களுடைய ஸ்மார்ட்போன்களில் பதிவு செய்து, அதனை தங்களது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். 

விளையாட்டாக ஆரம்பித்த இந்த சம்பவம், இளம்வயது சிறுவர்கள் உள்பட அனைவருக்கும் கிடைத்துள்ளது. 

மேலும், இந்த வீடியோவை சிலர் சமூக வலைத்தளங்களிலும் பரப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் பொலிசாரிடம் புகாராக அளிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பேசிய டேனியல் ஃபவ்ரே என்ற பொலிஸ் அதிகாரி, 14 வயது மாணவர்கள் இருவரின் சம்மதத்தின் பேரில் 

இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தாலும் கூட, அந்த வீடியோவை மற்றவர்களுக்கு பரப்பியது சட்டப்படி குற்றமாகும்.
குறிப்பாக 16 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களும் பார்க்கும்படி வீடியோவை பரப்பியுள்ளதால் மாணவர்கள் இருவர் மீதும், இதில் தொடர்புடைய பிற மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

பள்ளியின் நிர்வாகியான ஜீன் க்ளாட் மார்ங் கூறுகையில், இரண்டு மாணவர்களின் அத்துமீறிய செயல்களால் பள்ளி நிர்வாகத்திற்கு பெரும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை மனநல சிகிச்சைக்கும் அனுப்ப வேண்டும் என பொலிசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings