உத்தர பிரதேச முதல் - மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவின் எம்.பி. தொகுதியான கன்னூஜ்ஜியில் 15 வயது சிறுமியை பெற்றோர் கண் எதிரில் கொள்ளை கும்பல் கற்பழித்தது.
இது தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்து உள்ளனர். இந்த சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது போல் உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்டாய் மாவட்டம் சுர்சா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி உடல் நலம் இல்லாத தனது தந்தைக்கு மருந்து வாங்கச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பவில்லை.
இது போல் உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்டாய் மாவட்டம் சுர்சா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி உடல் நலம் இல்லாத தனது தந்தைக்கு மருந்து வாங்கச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பவில்லை.
இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பல இடங்களில் தேடினார்கள்.இந்த நிலையில் மறுநாள் காலையில் கிராமத்திற்கு வெளியே உள்ள வயலில் சிறுமி பிணமாக கிடந்தாள். அவளது உடலில் காயங்கள் இருந்தன.
போலீஸ் விசார ணையில் சிறுமி கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்பட் டது தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பழிப்பு குற்றவாளி களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதையடுத்து சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கற்பழிப்பு குற்றவாளி களை போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ஒரு பெண்ணை நான்கு பேரால் கற்பழிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
பெண்களின் தவறான தகவ லால் அப்பாவிகள் தண்டிக் கப்படுவதாகவும், உத்தரப் பிரதேசத்தில் கற்பழிப்பு குற்றங்கள் குறைவு என்றும் கூறியிருந்தார்.
அவர் சொன்ன மறுநாளே உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணை 7 பேர் கற்பழித்து கொலை செய்த சம்பவம் நடந்தது. தற்போது மேலும் ஒரு சிறுமி கும்பலால் கற்பழிக்கப்பட்டு இருக்கி றார்.
முலாயம் சிங் யாதவின் மருமகள் தொகுதியிலேயே ஒரு சம்பவம் நட்ந்து உள்ளது.இதை தொடர்ந்து உத்தரப்பிர தேசத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.