ராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை!

1 minute read
ராய் லட்சுமி – ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி வரும் சவுகார்பேட்டை, பேய்ப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் ராய் லட்சுமி பேயாக நடித்து வருகிறார், சமீபத்தில் படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.

இந்த சண்டைக் காட்சிகளில் பேயாக நடிக்கும் ராய் லட்சுமி பறந்து பறந்து சண்டை போட்டு நடித்திருக்கிறார்.

இந்த சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் ராய் லட்சுமி நடித்தபோது பாதுகாப்பிற்காக அவரது இடுப்பில் கட்டியிருந்த கயிறு லேசாக கைகளில் உராய்ந்து விட்டதாம்.

உடனே இதனை போட்டோ எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டு “சண்டைக் காட்சிகளில் நடித்தபோது விபத்தில் சிக்கி விட்டேன் சின்னதாக சிராய்ப்பு கையில் ஏற்பட்டது.
அடிபடாமல் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்க முடியாது என்று நினைக்கிறேன்” என்று கூறி தனது ரசிகர்களின் அனுதாப ங்களைப் பெற்று வருகிறார்.

ராய் லட்சுமியே பேஸ்புக்கில் தான் அடிபட்டதாக கூறியதால் பதறிப் போன ரசிகர்கள், நீங்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று தற்போது தீவிரமாக வேண்டி வருகின்றனர். எல்லாம் ஒரு வெளம்பரம் தான்.
Tags:
Today | 27, March 2025
Privacy and cookie settings