கலாம் புத்தக வெளியீடு தள்ளிப்போனது !

பெண்ணின் அருகில் ஒரே மேடையில் அமர சாமியார் பிரமாவிகாரி தாஸ் மறுத்ததால் கலாம் குறித்த புத்தகத்தை மலையாளத்தில் மொழி மாற்றம் செய்த பெண் எழுத்தாளருக்கு மேடையில் இடம் கிடைக்க வில்லை.
கலாம் புத்தக வெளியீடு தள்ளிப்போனது !
இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி யதால், புத்தக வெளியீட்டு விழா ஒத்தி வைக்கப் பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் கடைசி நூலை மலை யாளத்தில் மொழி யாக்கம் செய்யும் வேலையை ஸ்ரீதேவி எஸ்.கர்தா என்ற பெண் எழுத்தாளர் செய்திருந்தார். 

அப்புத்தகம் திருச் சூரிலுள்ள கேரள சாகித்ய அகாடமி அரங்கில் இன்று வெளியிடப் படுவதாக இறுந்தது. சுவாமி பிரமாவிகாரி தாஸ் இதற்கு தலைமை யேற்பதாக அறிவிக்கப் பட்டது. 

ஆனால், ஸ்ரீதேவிக்கு விழாவில் பங்கேற்க புத்தக வெளியீட் டாளர்கள் அனுமதி மறுத்து விட்டனராம். 

இதற்கு, சாமியார் தன்னுடன் ஒரு பெண் மேடையில் அமர கூடாது என்று கூறியதே காரணம் என்று ஸ்ரீதேவி தரப்பில் குற்றம் சாட்டப் பட்டது. 

இதை கேள்விப்பட்ட பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் விழா நடை பெறவிருந்த இடத்தில் போராட்டங்கள் நடத்தினர். இதை யறிந்த பிரமாவிகாரி தாஸ் விழாவுக்கு வராமல் தவிர்த்து விட்டார். 
இதனால் புத்தக வெளியீட்டு விழா தள்ளிப் போயுள்ளது. 

ஆனால், சுவாமி எதுவும் கூற வில்லை என்றும், புத்தக வெளி யீட்டுக்கு மொழி யாக்கம் செய்வோரை அழைப்பது தங்கள் பழக்கம் இல்லை என்றும் புத்தக வெளியீட்டு நிறுவனம் விளக்கம் தந்துள்ளது. 

ஆயினும் சமூக வலை தளங்களில் இந்த நிகழ்ச்சி விமர்சிக்கப் பட்டு வருகிறது.
Tags:
Privacy and cookie settings