அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 10 ஆண்களை திருமணம் ஜாலியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த பெண் லியானா கிறிஸ்டினா பேரியன்டாஸ் (Liana Kristina Barrientos).
திருமணம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், அதிரடியாக 10 ஆண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதில் விசேஷம் என்னவென்றால் ஒருவரை கூட இவர் விவாகரத்து செய்யவில்லை. கடந்த 1999ம் ஆண்டு காதலர் தினத்தன்று முதன் முறையாக திருமணம் செய்தார்.
தொடர்ந்து 15 நாட்களுக்கு Rockland பகுதியை சேர்ந்த நபரையும், 2-வது திருமணம் முடிந்து 13 நாட்களுக்கு பிறகு வேறொரு நபரையும் திருமணம் செய்து கொண்டார்.
இப்படியே 10 ஆண்களை திருமணம் செய்ததுடன், ஜாலியாக தேனிலவும் கொண்டாடினார்.
தற்போது 39 வயதாகும் லியானா எகிப்து, துருக்கி, ஜார்ஜியா, பாகிஸ்தான் மற்றும் மாலி நாட்டை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு பல திருமணங்களை செய்ததாக மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில்,
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 4 வருட சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.