மெக்காவில் 2006 க்குபின் நிகழ்ந்த சோகம் !

மெக்காவில் கடந்த 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு மீண்டும் நிகழ்ந்த நேற்றைய பெரும் விபத்தில் 107 பேர் பலியாகியுள்ளனர்.
மெக்காவில் 2006 க்குபின் நிகழ்ந்த சோகம் !
உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள், ஆண்டு தோறும் சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு ஹஜ் பயணம் சென்று வருகிறார்கள்.

ஹஜ் பயணிகள் தங்குவதற்கு, மெக்கா நகரில் விடுதிகள் உள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மெக்காவில் உள்ள பெரிய மசூதிக்கு அருகே இருந்த 9 மாடிகள் கொண்ட தங்கும் விடுதியில் தீப்பிடித்தது. 

அந்த விடுதியில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த ஹஜ் பயணிகள் தங்கி இருந்தனர். தீயை அணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராதவண்ணம், அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. 
கட்டட இடிபாடுகளுக்குள் ஏராளமான ஹஜ் பயணிகள் சிக்கினர். இந்த விபத்து மற்றும் அதனையொட்டி ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இறந்தவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். 
மெக்காவில் 2006 க்குபின் நிகழ்ந்த சோகம் !
இதே போன்று கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மெக்காவில் ஹஜ் பயணிகள் தங்கியிருந்த 9 அடுக்குமாடி கட்டடத்தின் 4 வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

ஆனால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, 139 பேரை பத்திரமாக காப்பாற்றினர். 13 பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். 

இந்த விபத்துக்களுக்குப் பிறகு, நேற்று மெக்கா பெரிய மசூதி மீது கிரேன் விழுந்த விபத்தில் 107 ஹஜ் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 238 பேர் படுகாய  மடைந் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings