மெக்காவில் 107 பேரை பலி வாங்கிய கிரேன் விபத்துக்கு இயற்கை சீற்றமே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெக்காவில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட இஸ்லாமியர்கள் அங்குள்ள பெரிய மசூதியில் குழுமியிருந்தனர்.
அப்போது அருகில் கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ராட்சத கிரேன் 2 துண்டாக முறிந்து மசூதி மீது விழுந்ததில் உள்ளே இருந்த 107 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த கிரேன் விபத்துக்கு பலத்த காற்று வீசியதே காரணம் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வேகத்துடன் காற்று வீசி வருகிறது. இந்த காற்றில் நிலை தடுமாறிய கிரேன், மசூதியின் மேற்கூரை மீது மோதி இரண்டு துண்டாக உடைந்தது.
Tags: