புனித மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருப்பது அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் ஆகும்.
சவுதி பின்லேடின் குரூப் என்ற நிறுவனம் தான் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் விஸ்தரிப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது.
அங்கு ஒரே சமயத்தில் 20 லட்சம் பேரை அனுமதிக்கும் அளவுக்கு இடவசதி விஸ்தரிக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம்தான் சவுதி பின்லேடின் குரூப் என்ற நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் கிரேன்தான் நேற்று முன்தினம் திடீரென சம்பந்தமே இல்லாமல் கீழே விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தி 107 உயிர்களைப் பலி கொண்டது.
பலப்பல காரணங்கள்...
இந்த விபத்துக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. மின்னல் தாக்கியதாக ஒரு தகவல் கூறுகிறது. பலத்த காற்றுதான் காரணம் என அரசுத் தரப்பு கூறுகிறது.
கடவுள் செயல்...
ஆனால் இது எதுவுமே இல்லை. இந்த விபத்து மனித சக்திக்கு அப்பாற்பட்டது.
கடவுளின் செயல் இது என்று பின்லேடின் நிறுவனத்தைச் சேர்ந்த என்ஜீனியர் ஒருவர் கூறியுள்ளார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஒசாமாவிற்கும் தொடர்பு...
ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி இந்த விபத்திற்கும் ஒசாமா பின்லேடனுக்கும் ஒரு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.
அல் கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கிய 9/11 நினைவு தினத்தன்று இந்த விபத்து நடந்துள்ளது.
பின்லேடனுக்கு சொந்தமானது...
அதாவது, கட்டுமானப் பணியை மேற்கொண்ட பின்லேடின் குரூப், அல் கொய்தா நிறுவனரான ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினருக்குச் சொந்தமானது.
உலகிலேயே மிகப் பெரிய 2வது கட்டுமான நிறுவனம் இது தான்.
முன்னணி கட்டுமான நிறுவனம்...
சவுதி பின்லேடின் குரூப் மிகப் பழமையான, பிரபலமான, முன்னணி கட்டுமான நிறுவனம் ஆகும்.
1931ம் ஆண்டு இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. ஷேக் முகம்மது பின்லேடன் சய்யீத் இதை நிறுவி்னார்.
ஒசாமாவின் அப்பா...
இந்த ஷேக் முகம்மது பின்லேடன் வேறு யாருமல்ல, அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் தந்தை ஆவார்.
ஷேக் முகம்மது பின்லேடனுக்கு மொத்தம் 22 மனைவியராம். இவர்கள் மூலம் 53 குழந்தைகள் இவருக்குப் பிறந்தனர்.
ஜெட்டா...
சவுதி மட்டுமல்லாமல் பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் இதன் செயல்பாடுகள் உள்ளன. ஜெட்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இது செயல்பட்டு வருகிறது.
பிரமாண்ட கட்டிடங்கள்...
சவுதியில் உள்ள பல பிரமாண்ட கட்டிடங்களைக் கட்டியது இந்த நிறுவனம் தான். ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் தான் கட்டினர்.
அதேபோல கோலாலம்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தையும் இந்த நிறுவனம் தான் கட்டியது.
இதே போல செனகல் விமான நிலையம், ஷார்ஜா விமான நிலையம், ஷார்ஜா பல்கலைக்கழகக் கட்டடம் ஆகியுவற்றையும் இவர்கள்தான் கட்டினர்.
மெக்கா-மதீனா நெடுஞ்சாலை...