பொதுவாக வாகனம் ஓட்டுவதில் ஆண்கள் தான் சிறந்து விளங்குவர் என உளவியல் கூட சொல்கிறது. காலங் காலமாக அடுப்படிக் குள்ளேயே வாழ்ந்து முடித்து விட்ட பெண்களுக்கு,
புதிதாக வாகனம் ஓட்டுவதால் கொஞ்சம் மேலோட் டமாகவே வாகனம் ஓட்டுவ தாகவும், டிராபிக் விதி முறைகளை பற்றி எவ்வித முன் யோசனையும் இல்லாதிருப் பதாகவும் சொல்லப் படுவதுண்டு.
ஆனால், சிறப்பாக கனரக வாகனம் ஓட்டுவது மட்டு மின்றி, பாகிஸ்தானின் முதல் பெண்ணாக பொது சேவை வாகனத்தை ஓட்டும் உரிமத் தையும் பெற்றிரு க்கிறார், பேகம் ஷமீம் அக்தர்(53).
கடந்த 2013-ம் ஆண்டு இவரது கணவர் அரசுப் பணியி லிருந்து ஓய்வு பெற்ற பின், குடும்பம் வருமா னமின்றி தவித்தது.
பேகம் தமது மூன்று பெண் பிள்ளைகளுக்கும் குறைந்த பட்ச கல்வியை அளித்தது மட்டு மின்றி அவர்களது திருமணச் செல வையும் கவனித்துக் கொண்டார்.
தற்போது சிறிய அளவில், வாகனப் பயிற்சி அளித்து வரும் அவர், தமது தகுதிக்கு ஏற்ற அரசுப் பணி வழங்கு மாறு, நாட்டின் பிரதமர் மற்றும், மாநில முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தனது இந்த வளர்ச் சிக்கு காரண மாக, இஸ்லாமா பாத்தின் டிராபிக் போலீசாரை பேகம் பணிவுடன் குறிப்பி டுகிறார்.
பேகம் போன்ற பெண்கள் பாகிஸ் தானின் பெண்களின் தைரியம் மற்றும் மனோப லத்திற்கு மட்டுமின்றி மொத்த மனித சமூகத் துக்கும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு எனலாம்.