சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள சிறுவர் பாடசாலை கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில்,
அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மக்களின் சமயோகித புத்தியால் 300 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப் பட்டுள்ளனர்.
இந்த சிறுவர் பாடசாலை அருகேயுள்ள காகிதப் பூக்கடையில் ஏற்பட்ட தீ, பாடசாலை வரை பரவியுள்ளது. கட்டிடம் முழுதும் புகை சூழ்ந்து கொண்ட நிலையில், ஆசிரியர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
இதற்கிடையில், கட்டிடத்தின் அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்த மக்கள், கட்டிடத்தின் கீழே நின்று கொண்டு பெரிய கம்பளியை விரித்துப் பிடித்துக் கொண்டனர்.
ஆசிரியர்களும், பணியாளர்களும் சேர்ந்து குழந்தைகளை ஜன்னல் வழியாக கம்பளி மீது தூக்கி எறிந்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
இதன் போது, சுமார் 300 குழந்தைகளுக்கும் மேல் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டனர்.
இவர்களில் 92 குழந்தைகளும், 12 பெரியவர்களும் சிறு காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தீயணைப்புப் படையினர் அரை மணி நேரத்தில் கட்டிடத்தில் பரவியிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: