இங்கிலாந்தை சேர்ந்த பொப் பாடகர் ஒருவர், தனது இல்லற வாழ்வின் ரகசியத்தை வெளியிட் டுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த பொப் பாடகர் மிக் ஹக்னால் (54).
1980களில் தனது பாடல்களால் மக்களை கவர்ந்து வந்த இவர், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் தினமும் 3 பெண்களுடன் உறவு கொள்வேன்.
நான் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகை கேத்ரீன் ஜெட்டா ஜோன்ஸ், சூப்பர் மொடல் ஹெலனா கிறிஸ்டென்சன் உள்ளிட்ட ஏராளமானோரோடு டேட்டிங் செய்துள்ளார்.
பின்னர் அவர் கேப்ரியலா வெஸ்பெர்ரி என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்னரே இவர்கள் இருவருக்கும் 2007ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.