ரஜினியுடன் "மோத" ரூ. 100 கோடி கேட்கிறாராமே அர்னால்டு?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள எந்திரன் 2ம் பாகத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க பலரையும் அணு கடைசியில் அர்னால்ட் ஸ்வார்ஸெனீக்கரிடம் போய் நிற்கிறார் இயக்குநர் ஷங்கர்.
 
ஆனால் அவர் ரூ. 100 கோடி கேட்பதால் இன்னும் டீல் ஏற்படாமல் இழுபறியாக உள்ளதாம். எந்திரன் 2 குறித்த எந்த விவரத்தையும் வெளியிடவில்லை இதுவரையும். 

வழக்கமாக அவர் கடைசி வரை எதையுமே சொல்லாமல் கமுக்கமாகத்தன் வேலை பார்ப்பார். அதேபோலத்தான் இப்போதும். இருந்தாலும் எந்திரன் 2 குறித்து அவ்வப்போது ஏதாவது செய்தி வந்தபடிதான் உள்ளது. 

அவர் நடிக்கப் போகிறார், இவர் நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வந்துகொண்டுதான் உள்ளன. இப்போது வில்லன் குறித்த பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

அர்னால்ட்தான் வில்லனா? 

எந்திரன் 2ம் பாகத்தில் அர்னால்ட் ஸ்வார்ஸெனீக்கர் வில்லனாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. படத்தின் பிரதான வில்லனே இவர்தானாம். 
சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

ஆனால் அர்னால்ட் ரூ. 100 கோடி சம்பளம் கேட்கிறாராம். நமக்கு இதைக் கேட்டால் கிடுகிடுக்கும். ஆனால் படத்திற்காக பணத்தைக் கொட்டப் போகிற லைகா நிறுவனம் பரவாயில்லை பாஸ் கொடுத்துரலாம் என்று கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.

பட்ஜெட் ரூ. 300 கோடியாம் 

இவருக்கே இந்த சம்பளம் என்றால் படத்தின் பட்ஜெட்டோ இன்னும் பயங்கரமாக இருக்கிறது. அதாவது ரூ. 300 கோடிக்கு பட்ஜெட் போட்டு வைத்துள்ளாராம் ஷங்கர். லைக்கா இதையும் "லைக்" செய்யும் என்று சொல்கிறார்கள்.
அர்னால்டுடன் தொடர்ந்து பேச்சு 

உலகம் முழுவதும் தெரிந்த முகம் அர்னால்ட் என்பதால் அவரை நிச்சயம் படத்தில் சேர்க்க ஷங்கர் ஆர்வமாக உள்ளாராம். இதன் மூலம் படத்தை மிகப் பெரிய அளவில் பிசினஸ் செய்ய முடியும்

என்பது அவரது கருத்தாகும். இதனால் லைக்கா மற்றும் ஷங்கர் சார்பில் தொடர்ந்து அர்னால்டுடன் பேச்சு நடந்து வருகிறதாம்.
உலக அளவில் ரிலீஸ் செய்ய 

அர்னால்ட் ஆர்வம் அர்னால்டும் படத்தில் நடிக்க ஆர்வமாகவே உள்ளாராம். மேலும் இப்படத்தை உலக அளவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் அவர் ஷங்கர் தரப்பிடம் கூறியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

ஐ பட விழாவில் ஷங்கர் 

இயக்க விக்ரம் நடித்த ஐ பட பாடல் விழாவின் நாயகனாக அர்னால்ட் கலந்து கொண்டார். அப்போதுதான் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க விருப்பம் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்தே ஷங்கருக்கும், அர்னால்டை பேசாமல் வில்லனாக்கி விடலாம் என்ற எண்ணம் வந்ததாம்.

கமல்ஹாசன் 

முதலில் வில்லன் வேடத்திற்கு கமல்ஹாசனைத்தான் யோசித்திருந்தார் ஷங்கர். கமலிடமும் கூட பேசினாராம். ஆனால் கமல் சில காரணங்களைக் கூறி வேண்டாம் என்று கூறி விட்டாராம்.
ஆமிர்கான் 

அடுத்து ஆமிர்கானை அணுகினார். அவருக்கும் ஆசைதான். ஆனால் இந்தியில் தான் நடித்து வரும் டங்கல் படத்திற்காக 98 கிலோ வெயிட்டை ஏற்றி வைத்திருப்பதால் இதில் நடிக்க முடியாமல் போய் விட்டதாம்.

விக்ரம் 

இதையடுத்து ஐ பட நாயகன் விக்ரமை அணுகினார் ஷங்கர். அவரும் கூட உடனே சரி என்று சொல்லி விட்டாராம். இருப்பினும் லைக்கா தயாரிப்பு என்பதால் உலகளாவிய முகத்தைத் தேட முடிவு செய்து விக்ரமை விட்டு விட்டாராம் ஷங்கர்.
ஹீரோயின் யார் பாஸ்...? 

வில்லனை விடுங்க.. இப்படத்தின் ஹீரோயின் யார் என்பதில்தான் பலருக்கும் கவலையாக உள்ளது. தீபிகா படுகோன், காத்ரீனா கைப் ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என்கிறார்கள்.
ஷங்கரே வாயைத் திறந்து சொன்னால் தான் 

மேலே உள்ள வரிகளில் உள்ள அனைத்தும் காதுகளை வந்து தாக்கிய தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. அவையெல்லாம் உண்மையா என்பதை ஷங்கரே வாயைத் திறந்து சொன்னால்தான் உண்டு!

மேலே உள்ள வரிகளில் உள்ள அனைத்தும் காதுகளை வந்து தாக்கிய தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. அவையெல்லாம் உண்மையா என்பதை ஷங்கரே வாயைத் திறந்து சொன்னால்தான் உண்டு!
Tags:
Privacy and cookie settings