தொடர்ந்து 18 கார்களுக்கு கீழாக ஸ்கேடிங் செய்து சாதனை!

சீனாவை சேர்ந்த ஸ்கேட்டிங் வீராங்கனை ஒருவர், தொடர்ச்சியாக 18 கார்களுக்கு கீழே ஸ்கேடிங் செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். மக்கள் அவ்வப்போது தாங்கள் நிகழ்த்திய சாதனைகளையும், பிறர் நிகழ்த்திய சாதனைகளையும் முறியடிக்க முயற்சிகள் மேற்க்கொள்கின்றனர்.
 

அவ்வகையில், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தான் அதிகப்படியான சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய நாளுக்கான சிறந்த வீடியோவில், சீன பெண் தொடர்ச்சியாக நிற்கவைக்கப்பட்டுள்ள 18 கார்களுக்கு கீழ் லிம்போ ஸ்டைலில் ஸ்கேடிங் செய்துள்ளார். 

லிம்போ ஸ்டைல் என்பது, ஒரு குறிப்பிட்ட உயரத்தில் வைக்கப்பட்டுள்ள குச்சி அல்லது வேறு ஏதேனும் பொருளுக்கு கீழே கைகளையும், கால்களையும் அகலமாக விரித்தப்படி செல்வது அல்லது ஸ்கேடிங் செய்வதை குறிக்கிறது. 

இந்த வினோதமான வீடியோவில், அந்த சீன பெண் 18 ஃபோர்ட் எட்ஜ் காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் கீழே லிம்போ ஸ்டைலில் எந்த விதமான பயமும் இல்லாமல், தலைக்கவசம் கூட அனியாமல் கால்களை அகன்றபடி ஸ்கேடிங் செய்துள்ளார். 

இந்த அபாரமான சாதனையை செய்யும் போது, அவர் வெளிபடுத்திய வளையும் தன்மை, மன உறுதி மற்றும் தைரியம் அனைவரையும் வியக்க வைக்கிறது. இவ்வாறாக, அவர் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
Tags:
Privacy and cookie settings