நடிகர் விஜயை பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கேலி செய்து மீம்ஸ் உருவாக்குவதாக கூறி, இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பின்
மதுரை மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.தங்கபாண்டி, மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில், விஜயை கேலி செய்து மீம்ஸ் உருவாக்குவதில் கீழ் கண்ட இரு பேஸ்புக் பக்கங்களும், ஒரு டிவிட்டர் அக்கவுண்டும் முன்னணியில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே அந்த பக்கங்களை நீக்க வேண்டும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவின்படி நீக்கப்பட கோரிக்கைவிடுக்கப்பட்ட பக்கங்கள் இவை தான்:
இதனிடையே, புகாரில் கூறப்பட்டுள்ள 3 சமூக வலைத்தள பக்கங்களில், இன்று மாலை நிலவரப்படி, முதல் இரு பக்கங்களும் செயல்பாட்டில் இல்லை.