தென் ஆப்ரிக்க தேசமான பாரகுவேயில் 11 வயதான பெண் குழந்தைக்கே ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களிடம் பயங்கர அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டில் பெண் குழந்தைகள் அதிக அளவில் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்த அவலத்தின் ஒரு சின்ன உதாரணம்தான் இந்த 11 வயது இளம் தாய்.
சிசேரியன்
அச்சிறுமியின் தாயாரின் வழக்கறிஞரான எலிசபெத் டோரலெஸ் செய்தியாளர்களிடம், அச்சிறுமிக்கு சிசேரியன் மூலமாக குழந்தை பிறந்துள்ளது.
பாரகுவேயின் ரெட் கிராஸ் மருத்துவமனையில் அச்சிறுமிக்கு பிரசவம் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெயர் சூட்டவில்லை
குழந்தைக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றும் அச்சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
சித்தப்பாவால் சீரழிக்கப்பட்டவர்
10 வயதாக இருக்கும் போது தன்னுடைய சித்தப்பா ஒருவராலேயே அக்குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
தாயார் சரியாக கவனிக்கவில்லை
கைது செய்யப்பட்டுள்ள அம்மனிதன் தீர்ப்பிற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அக்குழந்தையின் தாயும் சரியான கவனிப்பின்மை என்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் நம்பிக்கைகளின் படி கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும்.
கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பு
எனினும், அச்சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய தாயார் மனு செய்த நிலையில் கோர்ட் அதற்கு மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
14 வயதுக்கு முன்பே பலாத்காரம்
கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் 14 வயதிற்கு முன்னரே அந்நாட்டில் வருடம் தோறும் பலாத்காரம் செய்யப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.