ஆதார் எண் விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரையில் அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அட்டைக் கட்டாயமில்லை என்ற உத்தரவை மாற்றியமைக்கக் கோரிய மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
அதாவது, நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து முடிவுக்கு வரும் வரையில் விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆதார் எண் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், கட்டாயப் படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் 4 திட்டங்களுக்கு...
100 நாட்கள் வேலைத் திட்டம், அனைத்து வகையான ஓய்வூதியத் திட்டங்கள், வருங்கால வைப்பு நிதித் திட்டம், பிரதமரின் ஜன் தன் யோஜனா என்று 4 திட்டங்களுக்கு ஆதார் எண்ணை மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசின் வாதம்
உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, ஆதார் அட்டைக்கு ஆதரவான வாதங்களை முன்வைத்தார்.

அப்போது, “ பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தும் காலத் தில் நாம் உள்ளோம். இதுபோன்ற சாப்ட்வேர்களை பெரும்பாலா னவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்களை அந்த சேவையை அளிக்கும் நிறுவனங்கள் நமக்கு தெரியாமலேயே எளிதாக திரட்ட முடியும்.
ஆயினும் அதை பொருட் படுத்தாமல் மக்கள் அனை வரும் அதனை விரும்பி பயன் படுத்துகிறார்கள். பேஸ்புக்குடன் ஒப்பிடும்போது ஆதார் அட்டை திட்டமானது அதிக பாதுகாப்பானதாகும்.முழுமையான தனிநபர் ரகசியம் என சொல்வது பயனற்ற வாதமாகும்.
தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருமுறை யூ டியூப்பில் நீங்கள் ஒரு படம் அல்லது பாடல் காட்சியை பார்த்தீர்கள் என்றால், அடுத்தமுறை அந்த இணையதளத்துக்கு செல்லும்போது அதுவாகவே உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற வீடியோக்களை அளிக்கிறது.
ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சில சாப்ட்வேர்கள், நீங்கள் இப்போது எங்கு இருக்கிறீர்கள். செல்ல வேண்டிய இடத்துக்கு எவ்வளவு நேரத்தில் செல்ல முடியும் என்பதை துல்லியமாக தெரிவிக்கின்றன. இதில் தனி மனித ரகசிய பாதுகாப்புக்கு எங்கே இடம் இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அமிதவ ராய், “பெரும்பாலான அரசு திட்டங்களில் பயனடைய ஆதார் அட்டை கட்டாயம் என்றல்லவா கூறுகிறீர்கள். இது கட்டாயப்படுத்துவது ஆகாதா? ஆதார் அட்டையை பெற விரும்பும் அனைவரது கைகளுக்கும் அது சென்றடைகிறதா” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ரோஹத்கி, “கணவரை இழந்த பெண் ஒருவர் ஓய்வூதியம் பெற இப்போது 20 கி.மீ வரை சென்று வங்கியில் போடப்படும் பணத்தை எடுக்க வேண்டியுள்ளது. அவர் ஆதார் அட்டை பெற்றுவிட்டால் வங்கி பணியாளரே வீடு தேடிச் சென்று ஓய்வூதியத்தை அளிக்கும் வசதியை அளிக்க முடியும்.
நாட்டில் உள்ள 92 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங் கப்பட்டு விட்டது. நமது நாட்டில் அதிகம் பேர் வைத்திருக்கும் அடையாள அட்டை இதுதான். 7 கோடி பேர்தான் பான்கார்டு வைத்துள்ளனர்.

5 கோடி பேரே பாஸ்போர்ட் வைத்துள்ளனர். 12 முதல் 15 கோடி பேரிடமே ரேஷன் கார்டு உள்ளது. மேலும் ஆதார் அட்டை திட்டத்துக்காக ரூ.7 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை), இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை), இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.