வெளிநாட்டவரின் பையைத் திருடி பணத்தை எடுத்துக் கொண்டு ரிட்டர்ன் செய்த திருடன் !

வெளிநாட்டவர்களாக குறி வைத்து திருடி வந்த 61 வயது திருட்டுத் தாத்தாவை மும்பை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள
வெளிநாட்டவரின் பையைத் திருடி பணத்தை எடுத்துக் கொண்டு ரிட்டர்ன் செய்த திருடன் !
அந்நபரின் பெயர் கிஷோர் சுப்ரமணியன் மட்டாலி(61). வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களைக் குறி வைத்து திருடுவது தான் கிஷோரின் வழக்கம். 

ஆனால், அவ்வாறு திருடுகையில், சம்பந்தப்பட்டவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அந்தப் பையில் இருந்தால், அவற்றைக் குப்பையில் எறிந்து விட மாட்டார் கிஷோர். 

அதற்குப் பதில் அந்த ஆவணங்களை முறைப்படி உரியவரின் முகவரிக்கு அனுப்பி வைத்து விடுவார். 

இப்படி ஆவணம் ஒன்றை அனுப்பிய போது தான் மும்பை போலீசில் சிக்கியுள்ளார் கிஷோர். 

சவுதி அரேபியாவில் வாழ்ந்து வரும் தேவிதாசன் என்பவர் தனது கைப்பை திருடு போய் விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். 

அதில், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தேவிதாசனின் மங்களூர் முகவரிக்கு அவரது பாஸ்போர்ட் தபாலில் வந்தது. 
 வெளிநாட்டவரின் பையைத் திருடி பணத்தை எடுத்துக் கொண்டு ரிட்டர்ன் செய்த திருடன் !
அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிஷோர் சவுதி தூதரகத்தில் விசாரித்து தேவிதாசனின் முகவரியைக் கண்டுபிடித்தது தெரிய வந்தது. 

அதனைத் தொடர்ந்து கிஷோரை மும்பை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து மேலும் சில வெளிநாட்டவரின் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. 

மேலும் கிஷோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு திருட்டுகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. 

மேலும், தெலுங்கு, மலையாளம், தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மராத்தி என பல மொழியைத் தெரிந்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்டுள்ள கிஷோர் பி.எஸ்ஸி பட்டதாரி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings