விறுவிறுப்பான நடிகர் சங்கத் தேர்தல்.. வாக்களிக்க குவிந்த நட்சத்திரங்கள் !

நடிகர் சங்கத் தேர்தல் சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல் போல விறு விறுப்பாக நடந்து வருகிறது. ஊரில் உள்ள எல்லா மீடியாக்க ளும் தேர்தல் செய்தியை சேகரிக்க குவிந்துள்ளன. பரபரப்பான தேர்தல் களத்தி லிருந்து நேரடி தகவல்கள்... 
 Actors sangam elections, Live coverage
* நடிகர் சங்கத் தேர்தலில் இதுவரை 2435 வாக்குகள் பதிவு 

* மொத்த தபால் வாக்குகள் 783 -நேரடியாக வந்து வாக்களித்தவர்கள் 1652

* வாக்குகள் மாலை 6 மணியளவில் எண்ணப்படும் - தேர்தல் அதிகாரி பத்மநாபன் 

* இதுவரை 1500 ஓட்டுகள் பதிவாகியுள்ளன: சரத்குமார் 

* வடிவேலு தான் காமெடியனாச்சே பாஸ்... : சரத்குமார் 

* விஷால் தாக்கப்பட்டதாக வடிவேலு கூறியிருந்தார் 

* விஷால் நல்ல நடிகர், அதனால் சீன் கிரியேட் செய்து விட்டார்: சரத்குமார் 

* வெற்றி, தோல்வி அனைவருக்கும் பொதுவானது: சரத்குமார் 

* சீனியரை தவறாக பேசியதால் பிரச்சினை ஏற்பட்டது: சரத்குமார் 

* மோகன் வாக்கு முன்னதாகப் பதிவு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும்: சரத்குமார் 

* வாக்குப்பட்டியல் நீதியரசால் சரிபார்க்கப்பட்டது: சரத்குமார் 

* போர் போன்ற சூழலை உருவாக்கி, பாதுகாப்பு கேட்டது எதிரணி: சரத்குமார் -எந்தவொரு கைகலப்பும் நடக்கவில்லை: சரத்குமார் 

* விஷாலை நான் தாக்கவில்லை: சரத்குமார் விளக்கம் 

* காலை முதல் சிறப்பாக வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது: சரத்குமார் 

* அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடந்ததே சலசலப்பிற்குக் காரணம்: சரத்குமார் விளக்கம் 

* விஷாலை மட்டுமல்ல யாரையும் தாக்கும் எண்ணம் எனக் கில்லை: சரத்குமார்
 
* விஷால் கன்னத்தில் முக்கிய நடிகர் ஓங்கி பளார் என அறைந்ததாக பரபரப்புத் தகவல் 

* நடிகை சங்கீதாவை முக்கிய நடிகர்கள் இருவர் அசிங்கம் அசிங்கமாக திட்டியதாக சர்ச்சை 

* தன்னைப் பார்த்து கேள்வி கேட்ட சங்கீதாவை முக்கிய நடிகர் அசிங்கமா பேசியதாக விஷால் தரப்பு புகார் 

* சங்கீதாவை அசிங்கமாக பேசியதால்தான் விஷால் கோபத்துடன் தலையிட்டதாகவும் தகவல் -விஷாலை யாரும் தாக்கவில்லை: ராம்கி 

* தேர்தல் சுமூகமாக நடந்து வருகிறது 

* அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடந்ததால் சலசலப்பு: சரத்குமார் விளக்கம் 

* அவரவர் கருத்துக்களை சொல்வதால் பிரச்சினை இல்லை - விஜயகாந்த் 

* இதை விடவும் முக்கியமான பிரச்சினைகள் நாட்டில் இருக்கின்றன- விஜயகாந்த் 

* நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வாக்களித்தார் 

* நடிகர் சங்கம் என்று பெயர் இருந்தால் போதும் - கவுண்டமணி 

* என்ன நடந்தாலும் தேர்தலை நிறுத்த முடியாது: விஷால் 

* தேர்தலை நிறுத்த எதிரணியினர் சதி: விஷால் 

* முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் வாக்களித்தார் 

* வாக்குச்சாவடிக்கு முன்னாள் இரு அணியினரும் ஒற்றுமையுடன் நிற்கின்றனர் 

* நடிகர்கள் விஜயகுமார், பொன்வண்ணன், கார்த்தி அமைதியை நிலைநாட்ட முயற்சி

* விஷாலின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் 

* உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் - வடிவேலு 

* முழு முயற்சியுடன் தேர்தலை நிறுத்த எதிரணியினர் சதி - வடிவேலு 

* நடிகராக நடந்து கொள்ளுங்கள் ரவுடித்தனம் வேண்டாம் - வடிவேலு கோரிக்கை 

* கலவரம் செய்பவர்களை ஊடகங்கள் போட்டுக் காட்டவேண்டும் - வடிவேலு 

* நடிகர் அல்லாத ஒருவர் தன்னைத் தாக்கியதாக தனியார் தொலைக்காட்சிக்கு விஷால் பேட்டி 

* உள்ளே பெரிய சண்டை நடைபெறவில்லை - கோவை சரளா தகவல் 

* கள்ள ஓட்டுப் போடப் படுவதாக கோவை சரளா குற்றச்சாட்டு 

* விஷால் அணியைச் சேர்ந்தவர் கோவை சரளா 

* அடிதடிக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது 

* தேர்தலில் முறைகேடு நடப்பதாக விஷால் அணி புகார் 

* தேர்தலை நிறுத்த கோரிக்கை 

* விஷாலை சரத்குமார் அடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புகார் 

* நடிகை சங்கீதாவை உள்ளே விட மறுப்பு -சங்கீதாவை சரத்குமார் தாக்க முயன்றதாகத் தகவல் 

* சங்கீதா மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது 

* ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டதால் பரபரப்பு -நடிகர் விஷாலும் தாக்கப்பட்டதாகத் தகவல் -தள்ளுமுள்ளுவால் நடிகர் விஷால் மயக்கம்
* பாண்டவர் அணி அமோக வெற்றி பெறுவது உறுதி - வடிவேலு 

* நடிகை ஒருவரை சரத் அணி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது 

* வாக்குச்சாவடியை நோக்கி நடிகர், நடிகைகள் ஓட்டம் 

* பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் உள்ளே சென்றனர் 

* செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுப்பு 

* நடிகர் சங்கத் தேர்தலில் திடீர் வன்முறை 

*  வாக்குச் சாவடிக்கள் பெரும் அடிதடி 

* சிம்பு, விஷால் இடையே கடும் மோதல் மூண்டதாக தகவல் 

* போலீஸ் உள்ளே புகுந்து தடியடி 

* போர்க்களமாக மாறியதால் நடிகர் சங்கத் தேர்தலில் திடீர் பரபரப்பு 

* 11 மணி நிலவரப்படி 800 வாக்குகள் பதிவு - தேர்தல் அதிகாரி பத்மநாபன் 

*  நடிகர் சிம்பு தந்தை டி.ராஜேந்தருடன் வந்து வாக்களித்தார் 

* தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றினால் நல்லதுதான் - சிம்பு 

* சிலம்பரசன் ஒரு உண்மையான தமிழன் -டி.ராஜேந்தர் 

* வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை - டி.ராஜேந்தர்

* கூவத்தை விட மோசமானதாக இருந்தது நடிகர் சங்க பிரச்சாரம் - பார்த்திபன்
* வெற்றிபெற்ற அணி மற்ற அணி ஏன் தோல்வியுற்றது என்பதை யோசிக்க வேண்டும் - பார்த்திபன் 
* அவ்வாறு யோசித்தால் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது - பார்த்திபன் 

* இது தேர்தலா என்பதே எனக்குச் சந்தேகமாக உள்ளது: நாசர் 

* திருவிழா போல் இருக்கிறது: நாசர் 

* உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட வாக்களிக்க வருவது மகிழ்ச்சி: நாசர் 

* ரஜினியின் கோரிக்கை குறித்து பின்னர் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்: நாசர் 

* நடிகர் சங்கத் தேர்தல்: மாற்றம் இருக்கும்...ஏமாற்றம் இருக்காது - பாபிலோனா 

* நடிகர் சங்கத் தேர்தல் நடிகர் பிரசாந்த் தந்தை தியாகராஜனுடன் வந்து வாக்களித்தார் 

* சந்தா கட்ட முடியாத உறுப்பினர்களை நீக்காமல், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் - தியாகராஜன் 

* யார் வென்றாலும் நல்லது நடக்க வேண்டும் - பிரசாந்த் 

* நடிகர் சங்கத்திற்கு ஜனநாயக முறையில் முதன்முறையாக தேர்தல் நடைபெறுவது மகிழ்ச்சி: சுந்தர்.சி 

* இப்படி தேர்தல் நடப்பது தான் அனைவருக்கும் நல்லது: சுந்தர்.சி 

* நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் கட்சியில் இல்லாமல் இருப்பது நல்லது: சுந்தர்.சி 

* நடிகர் சங்கமானது அரசியல் சார்ந்து இருக்கக்கூடாது: சுந்தர்.சி 

* ஒவ்வொருவரின் ஓட்டும் முக்கியமானது - சுகன்யா
* தேர்தலில் ஒற்றுமை இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது - சுகன்யா 

* நடிகர் சங்கம் சங்கமமாக மாற வேண்டும் - சுகன்யா 

* -நடிகர் சங்க தேர்தலுக்கு வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு 

* நடிகர்கள் ஓட்டுப் போடுவதற்காக பணத்தை வாரியிறைத்து பாதுகாப்பு கொடுக்கும் தமிழக அரசு 

* 2 இணை ஆணையர்கள், 8 துணை ஆணையர்கள் தலைமையில் கிட்டத்தட்ட 1000 போலீஸ் பாதுகாப்பு 

* மக்கள் வரிப்பணத்தில் நடிகர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் போலீஸ் 

* மீடியாக்களுக்கு சுத்தமாக மரியாதை இல்லை.. உள்ளே நுழையக் கூட அனுமதிக்காமல் பயங்கர கெடுபிடி 

* பாதுகாப்பு என்ற பெயரில் கெடுபிடி செய்யும் போலீஸ் 

* கடுமையாகப் போராடிய பின்னரே குறிப்பிட்ட தூரம் வரை செல்ல மீடியாக்களுக்கு அனுமதி -அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப் போட வந்த அம்பிகா, ராதா 

* அனுமதிக்க மறுத்த போலீஸாருடன் கடும் வாக்குவாதம் 

* கடும் வாதத்திற்குப் பின்னர் அடையாள அட்டை இல்லாமலேயே ஓட்டுப் போட அனுமதி 

* நடிகர் சங்க முன்னாள் தலைவர் விஜயகாந்த் வாக்களிக்க வருகை 

* நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க தனது பெயர் விடுபட்டுள்ளது: மூத்தநடிகை சச்சு புகார் 

* முறையாக ஆண்டு சந்தா செலுத்தியும் எனது பெயர் விடுபட்டுள்ளது: சச்சு

* தேர்தலுக்குப் பின் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்: கமல் 

* பல பெரியவர்கள் ஆசையுடன் எழுப்பியது நடிகர் சங்கம்: கமல் 

* தென்னிந்திய நடிகர்கள் சங்கம் இந்திய நடிகர்கள் சங்கமாக மாற வேண்டும்: கமல் விருப்பம்

* நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார் கமல் -சூர்யாவும், ஜோதிகாவும் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்

* தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும்: கார்த்திக் 

* நடிகர் சங்கத் தேர்தல்: கெளதமியுடன் வந்து கமல்ஹாசன் ஓட்டுப் போட்டார் 

* நடிகர் சங்கத் தேர்தல் : வாக்குப்பதிவு செய்ய கமல், கவுதமி வருகை 

* வெற்றி பெறும் அணியே ரஜினியின் கோரிக்கையை பற்றி முடிவு செய்யும்: குஷ்பு 

* வெற்றி நல்ல அணிக்கே வந்து சேரும்: குஷ்பு நம்பிக்கை 

* 9 மணிவரை 350 வாக்குகள் பதிவு - தேர்தல் அதிகாரி 

* தேர்தல் முடிவுக்குப் பின் சண்டை மறைந்து சமாதானம் உண்டாகும் - ராம்கி 

* அக்கா, தங்கச்சி சண்டை போலத்தான் இதுவும் - அம்பிகா, ராதா 
* தேர்தலில் யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் - சத்யராஜ் 

* தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக உரிமை, வாக்களித்துள்ளேன் - நடிகை லட்சுமி
* பொதுவானவர்களுக்கே எனது ஓட்டு - நடிகர் செந்தில் 

* நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றுவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன- எஸ்.வி.சேகர் 

* பெயரை மாற்ற வேண்டுமானால் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - எஸ்.வி.சேகர் 

* "தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்" - ரஜினி கோரிக்கைக்கு பிரபு வரவேற்பு 

* சங்கத்தின் பெயரை மாற்றுவதை விட மேம்பாடுதான் முக்கியம் - கார்த்திக் 

* முதல் முறையாக வாக்களிக்க வந்த நடிகர், நடிகையர் உற்சாகம் 

* வாக்களிக்க ஆர்வத்துடன் வருகை 

* வாக்களிக்க வந்த அம்பிகா, ராதா

* ஓட்டுப் போட வந்த நடிகர், நடிகையரைப் பார்த்து ரசிக்க கூடிய மக்கள் கூட்டம் 

* நடிகர் சங்கத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு 

* தொடங்கியது நடிகர் சங்கத் தேர்தல்,,, ராதாரவி வாக்களித்தார்!
Tags:
Privacy and cookie settings