பூவில் மிதக்கும் உலோகம்!

உலகிலேயே மிகவும் லேசான உலோகத்தை (Metal) உருவாக்கி, மைக்ரோ பின்னல் (micro-lattice) தொழில் நுட்பத்தில் மாபெரும் சாதனையை படைத் துள்ளது போயிங் (Boeing) நிறுவனம்.
 போயிங்


போயிங் - அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.  போயிங் நிறுவனத்தை பொருத்த வரையில், இதுதான் உலகிலேயே மிகவும் லேசான பொருளாகும்.

அது மட்டுமின்றி இதுவரை உருவாக்கப்பட்ட லேசான பொருள்களிலேயே மிகவும் திடமான பொருளும் இது தான் என்பது குறிப்பிடத் தக்கது.
உலோகம்


மனித ரோமத்தோடு ஒப்பிடும் போது, ஆயிரத்தில் ஒரு பங்கு தான் இதன் தடிமம் என்பதும், 
இதில் 99.9% வெறும் காற்று மட்டும் தான் என்று கூறியுள்ளார் நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானியான சோஃபியா யங் (Sophia Yang).

மேலும் இந்த அற்புத படைப்பபனது, பெரும்பாலும் விமான தயாரிப்பில் பயன்படுத்தப்பட இருக்கிறது என்றும் அவர் கூறியுளார்.
Tags:
Privacy and cookie settings