சிங்கப்பூரைச் சேர்ந்த எங் பிங் பிங் என்ற 37 வயதுப் பெண்ணுக்கு ஒரே ஒரு கவலைதான். அதுவும் கூட காமெடி கவலை. காரணம் இவரிடம் யாருமே டேட்டிங் செய்ய விருப்பம் தெரிவிப்பதில்லை யாம்.
காரணம் இவரது உயரம். சீனப் பெண்கள் பெரும்பாலும் குள்ளமாகத் தான் இருப்பார்கள். ஆனால் இவரோ 5 அடி 6 அங்கலம் உயரத்தில் இருக்கிறாராம்.
இந்த உயரம் காரணமாகவே யாரும் இவரிடம் ஐ லவ் யூ சொல்ல விரும்புவதில்லையாம்.
ஆனால் இதற்கெல்லாம் இந்த பிங் பிங் மனம் உடைந்து போகவில்லையாம். மாறாக, என்னிடம் நெருங்க யாருக்கும் தைரியம் இல்லையே என்று கலாய்க்கிறார் ஆண்களை.
விற்பனை மேலாளர்..
பிங் பிங் சிங்கப்பூரில் ஹேர் கேர் தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை மேலாளராக இருக்கிறார். வழக்கமான சீனத்துப் பெண்களைப் போல இல்லாமல் செம ஹைட்டாக இருக்கிறார்.
நல்ல அழகியும் கூட...
ஹைட்டாக இருந்தாலும் நல்ல அழகியாக இருக்கிறார். வசீகர முகம், வாளிப்பான தோற்றம் என எந்த ஆணுக்குமே உற்சாகம் தரும் தோற்றம்தான். ஆனால் உயரம்தான் பல ஆண்களுக்கு இடிக்கிறதாம்.
பாசிட்டிவ் பொண்ணு பாஸ்...
நான் ஒரு பாசிட்டிவ் சிந்தனை கொண்ட பெண். தெருவில் நடக்கும் போதும், மனிதர்களைச் சந்திக்கும் போதும் நான் மிகுந்த நம்பிக்கையுடன், துணிச்சலுடன் எதிர் கொள்வேன்.
பசங்க பயப்படுவாங்க...
என்னிடம் நெருங்கவே ஆண்கள் அஞ்சுவார்கள். காரணம் எனது உயரம் மட்டுமல்ல. பட்டென்று பேசும் எனது வெளிப்படையான குணமும் கூட ஒரு காரணம். மேலும் ஈகோவும் இன்னொரு காரணம்.
டேட்டிங்கில் எனக்கும் ஆர்வம் இல்லை...
டேட்டிங்கில் எனக்கும் கூட ஆர்வம் கிடையாது. யாராவது வந்து சொன்னால் கூட பரவாயில்லை. எல்லாம் பயந்தாங் கொள்ளிகளாக இருக்கிறார்கள். நான் என்ன செய்வது.
செலவு செய்ய என்னிடம் காசு உள்ளது...
வழக்கமாக பெண்களுக்காக செலவு செய்ய ஆண்கள் முண்டியடிப்பார்கள். ஆனால் அதை நான் விரும்புவதில்லை.
என்னிடம் காசு உள்ளது. அதை எனக்காக செலவிடவும் எனக்குத் தெரியும். பிறரின் காசில் வாழ நான் விரும்புவதில்லை.
சிரிக்க வச்சா போதும்...
எனக்கென்று உள்ள ஆண் வந்தால் அப்போது பார்க்கலாம். அவன் என்னை சிரிக்க வைக்க வேண்டும். விழுந்து விழுந்து சிரிக்க வைக்க வேண்டும்.
எனக்காக வாழ வேண்டும் என்று கூட நான் ஆசைப்படவில்லை. தன்னம்பிக்கை மிகுந்தவனாக இருக்க வேண்டும்.
நல்லா சாப்பிடுவேன்.. நல்லா குடிப்பேன்...
நான் நன்றாக சாப்பிடுவேன். நன்றாக குடிப்பேன். நன்றாக ஊர் சுற்றுவேன். யாரையும் சார்ந்து நான் வாழ விரும்புவதில்லை. என் உலகில் நான்தான் ராணி என்றார் பிங் பிங்.