மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களின் உடல் வலிமையை மேம்படுத்தும் வகையில் எல்லா அரசு அலுவலகங்களிலும் ஜிம் அமைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
மேலும், இந்த ஜிம் கட்டிடங்களுக்காக ஒவ்வொரு அமைச்சரும் 500ல் இருந்து 1000 சதுர அடி நிலைத்தினை அரசு அலுவலக அமைப்பில் ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், அரசுப் பணியாளர்களை ஊக்கப் படுத்தி அவர்களின் மன வலிமையையும் உற்சாகமாக அதிகரிக்கும் வகையில்
அட்வென்சுரல் ஆக்டிவிட்டிஸ் எனப்படும் மலையேற்றம், சுற்றுலா, பாரா செய்லிங் போன்றவற்றையும் அமைத்துத் தர முடிவு செய்யப் பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய அரசுப் பணியாளர்களுக்கான சலுகைகள் கொட்டிக் கிடக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
மேலும், சமீப காலமாக அதிகளவிலான அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் ஒரு புறம் நடைபெறுகின்றது என்பதும் குறிப்பிடத் தக்கது.