காரைக்குடி இராம. சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பயனற்ற பொருட்களிலிருந்து தரமான கலைப் பொருட்களைத் தயாரித்து அசத்தி காட்சிக்கும் வைத்திருந்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பயனற்ற பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
ஏழாம் வகுப்பு " அ " பிரிவு "மாஸ்டர் பிரைன் இன் ட்ரைனிங்" மாணவர்கள், பயனற்ற பொருட்களை கொண்டு கலை பொருட்களை தயாரித்து கண்காட்சி அமைத்திருந்தினர். வகுப்பு ஆசிரியர் செ. சித்ரா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கண்காட்சியை பட்டதாரி ஆசிரியர் மு. கோமதி துவக்கி வைத்தார். அனைத்து வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் கண்காட்சியை கண்டுகளித்தனர். விதவிதமாக வைக்கப்பட்டிருந்த கலைப் பொருட்களை கண்டு இப்படியும் செய்ய முடியுமா? என வியந்தனர்.
கண்காட்சியை பார்வையிட்ட பள்ளித் தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா மாணவர்களின் செயல்பாடுகளைப் பாராட்டி மேலும் ஊக்கப்படுத்திப் பேசினார். கண்காட்சியை பார்வையிட்ட அனைவருக்கும் பட்டதாரி ஆசிரியர் எஸ். விஜயலெட்சுமி நன்றி கூறினார்.