மணிரத்னம் படத்திலிருந்து விலகினார்.. கீர்த்தி சுரேஷ்!

1 minute read
மணி ரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த கீர்த்தி சுரேஷ் கால்ஷீட் பிரச்னை காரணமாக அப்படத்திலிருந்து விலகியுள்ளார். ஓ காதல் கண்மணிக்குப்
 Keerthi Suresh withdrawn from Manirathnam movie
பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் கார்த்தி, துல்கர், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது.ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 

படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வந்தன. ஆனால் இப்போது படத்தில் முதலில் ஒப்பந்தமாகியிருந்த நடிகர்களில் சிலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

துல்கர் 2 மலையாளப் படங்களில் பிஸியாக உள்ளார். டிசம்பருக்குள் அந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிவடைய வாய்ப்பில்லை என்பதால் அவருக்குப் பதிலாக தெலுங்கு நடிகர் நானியை ஒப்பந்தம் செய்துள்ளார் மணி ரத்னம்.

அதேபோல தேதி பிரச்னைகளால் மணி ரத்னம் படத்திலிருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளார். கடந்த வாரம் மணி ரத்னத்தைச் சந்தித்த கீர்த்தி சுரேஷ், படத்தில் நடிக்கமுடியாத சூழ்நிலையில் தான் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

இதை மணி ரத்னமும் ஏற்றுக்கொண்டார் எனத் தெரிகிறது. கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக ரெயா என்கிற தெலுங்குப் படத்தில் நடித்த சயாமி கெர், இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Tags:
Today | 4, April 2025
Privacy and cookie settings