இந்தியாவில் வால்மார்ட் பல லட்சம் டாலர் லஞ்சம் அளித்ததாக அறிக்கை!

அமெரிக்காவின் பிரபல சங்கிலித் தொடர் நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் பல லட்சம் டாலர் களை லஞ்சமாக அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

 

இது தொடர்பாக வால்ஸ்டிரீட் பத்திரிகையில் வெளியான செய்தியில் சந்தேகப்படும்படி யான லஞ்சம் என்ற தலைப்பில் இந்தியாவில் பல லட்சம் டாலர் தொகையை வால்மார்ட் நிறுவனம் வழங்கியதாக தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. 

சுங்கத் துறை வழியாக பொருள்களை எடுத்து வருவதற் கும், இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் அனுமதி பெறுவதற்கும் இத்தகைய லஞ்சம் வழங்கப்பட்டிருப்பதாக அந்த செய்தி யில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தத் தொகையானது 200 டாலருக்கும் குறைவாக அதாவது இந்திய மதிப்பில் அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரையிலும் குறைந்தபட்சம் 5 டாலர் அதாவது ரூ. 500-க்கும் குறைவான தொகை லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது. 

இவை அனைத்தும் பல நிலைகளில் பல தரப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றை ஒட்டுமொத்தமாக சேர்த்தால் அது பல லட்சம் டாலர்களைத் தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2013-ம் ஆண்டு பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் வால்மார்ட் இறங்கியது. 

 இதற்கு முன்பு ஒட்டுமொத்த வர்த்தக நிறுவனமாக தன்னிச்சையாக அதாவது எந்த நிறுவனத்துடனும் சேராமல் இந்தியாவில் விற்பனையைத் தொடங்குவதென வால்மார்ட் முடிவு செய்திருந்தது. 

இதற்கு முன்பு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இந்தியாவில் விற்பனை யகங்களைத் திறக்க நெருக்குதல் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

வால்மார்ட் நிறுவனத்தின் இத்தகைய லஞ்சம் அளித்த செயல் தண்டனைக்குரிய குற்றமாகாது. ஏனெனில் இவ்விதம் லஞ்சம் வழங்கியதால் அந்நிறுவனம் எத்தகைய ஆதாயத்தையும் அடையவில்லை. 

இதனால் வெளிநாட்டு ஊழல் செயல்பாடு சட்டத்தின் (எப்சிபிஏ) கீழ் வால்மார்ட் நிறுவனத்தை அமெரிக்க சட்டங்களால் தண்டிக்க முடியாது. ஆனால் இது தொடர்பாக வால்மார்ட் நிறுவனம் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. 

இந்தியாவில் வால்மார்ட் நிறுவனம் லஞ்சம் வழங்கியதற் கான ஆதாரத்தை அந்நாட்டு புலனாய்வு அமைப்பு திரட்டியுள்ளது. மெக்சிகோவில் வால்மார்ட் நிறுவன செயல்பாட்டில் நிகழ்ந்த லஞ்ச புகார் தொடர்பாக அந்நாட்டு புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொண்டது. 

அப்போது இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய விவரம் கிடைத்தது. ஆனால் மெக்சிகோவில் லஞ்சம் வழங்கியது தொடர்பான ஆவணம் ஏதும் கிடைக்கவில்லை, என்று வால்ஸ்டிரீட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
Tags:
Privacy and cookie settings