கணிணி அசெம்பிள் செய்வது எப்படி - பாடம் மூன்று!

கேபினெட் SMPS அடுத்து நாம் பார்க்க போகும் முக்கியமான கணிணி பாகம் மதர்போர்டு . 
கணிணி அசெம்பிள் செய்வது எப்படி - பாடம் மூன்று!
அப்படி என்ன இந்த மதர் போர்டில் இருக்கிறது என்று பார்த்தால் ஒட்டு மொத்த கணினியின் அணைத்து வேலைகளுமே இங்கிருந்து தான் தொடங்கி முடிகின்றன .

மதர் போர்டில் பல வகைகள் இருந்தாலும் அதிகமாக புழக்கத்தில் உள்ளது இன்டெல் வகை போர்ட்களே . விளையாட்டு பிரியராக இருந்தால் AGP ஸ்லாட் உள்ளதாக வாங்க வேண்டும் .

படங்கள் அதிகமாக பார்பவராக இருந்தால் HDMI(High-Definition Multimedia Interface) சப்போர்ட் உள்ளதாகவும், இசை பிரியர்களுக்கு சவுண்ட் கார்டு சப்போர்ட் உள்ளதாகவும் 

5:1 அல்லது 7:1 ஸ்பீக்கர் சப்போர்ட் உள்ளதாக வும் வாங்கலாம் . ராம் சப்போர்ட் ddr3 இருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மதர் போர்டு வாங்கும் போது ப்ராஸ்ஸசர்(பொதுவாக LGA775) சப்போர்ட் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . 

usb சப்போர்ட் 2 இருகிறதா மற்றும் sata ஹர்டிச்க் சப்போர்ட் செய்யுமா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதில் பல பெயர்கள் சிலருக்கு புதியவையாக இருக்கும் அடுத்தடுத்து வரும் வகுப்புகளில் அவற்றை பற்றி விளக்கமாக பார்கலாம் . மதர் போர்டு failure ஆனால் உடனே காட்டி கொடுப்பது கண்டன்சர்களே .
 கணிணி அசெம்பிள் செய்வது எப்படி - பாடம் மூன்று!
செயல் இழந்த கண்டன்செர்கள் சற்று உப்பி அல்லது வெடித்து காணப் படும் . மதர் போர்டு உடன் வரும் மதர்போர்டு cd யை எப்போதும் இன்னொரு காப்பி எடுத்து கொள்ளவும் .

அலுவலகத்திற்கு கணிணி வாங்குவோர் லேன் போர்ட் உள்ள போர்டு தேர்ந்தெடுக்கவும் .

தற்போது வரும் எல்லா போர்ட்களிலும் லேன் போர்ட் வருகிறது. parallel போர்ட் சப்போர்ட் செய்வதாகவும் இருக்க வேண்டும்

ஏனனில் மென்பொருளுக்கு வரும் லைசென்ஸ் key சிலவை parallel port சர்ந்தவையே . விளையாட்டு பிரியர்கள் அதிகமா வாங்குவது Nvidea கிராபிக்ஸ் கார்ட்களே .

இவை தவிர ATI, ASUS உள்ளன . அதேபோல் இசை பிரியர்கள் நாடுவது creative அல்லது யமஹா சவுண்ட் கார்ட்களே . 

எப்பெல்லாம் உங்க கணிணி தப்பா நேரத்த காட்டுதோ அப்ப உடனே உங்க மதர் போர்ட்ல இருக்கிற cmos battery ய மாத்திருங்க .
 கணிணி அசெம்பிள் செய்வது எப்படி - பாடம் மூன்று!
இந்த cmos (complementary metal oxide semiconductor) வேலை என்னன்னா உங்க கணிணியின் போர்டு, ராம் ஹார்டிஸ்க் ஆகியவற்றின் வகைகளையும், நேரம் மற்றும் நாளையும் சேமித்து வைத்து கொள்ளும்.

நாம அசெம்பிள் செய்ய வாங்க போகும் மதர் போர்டு இன்டெல் G41 DG41KR - 4500 rs. அடுத்த வகுப்பில் நாம் பார்க்க போவது கணிணியின் இதயமான ப்ராஸ்ஸசரை பற்றி.
Tags:
Privacy and cookie settings