நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றிருந்தேன்!

நடிகர் சங்க தேர்தலில் நிற்க வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் அந்த ஒப்பந் தத்தை நிறை வேற்றவே நின்றேன் என நடிகர் சரத்குமார் தெரிவித் துள்ளார். 
 
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது விஷாலின் பாண்டவர் அணிக்கும், சரத்குமார் அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இந்நிலையில் விஷாலின் பாண்டவர் அணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது. நடிகர் சங்க தலைவராக நாசர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நாசர் 

நாசர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நல்ல ஒரு தேர்தல், ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல். நாசர் அவர்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நாசர் அவர்கள் என்னிடம் சரத் சார் உங்களின் உதவி தேவை என்றார்கள்.

ஒற்றுமை 

என்னைப் பொறுத்த வரை வெற்றி, தோல்வி சகஜம். தென்னிந்திய நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என்று நினைத்து பயணிப்பவன் நான்.
தேர்தல் 

தேர்தல் முடிந்து விட்டது. இனி நடக்க வேண்டி யதை பார்க்க வேண்டும். நடிகர் சங்க கட்டிடத்தை எப்படி கட்டப் போகிறோம் என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

மீண்டும் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் படித்து பார்த்து நாங்கள் சிறந்த ஒரு ஒப்பந்த த்தை தான் போட்டு ள்ளோம் என்பதை அவர்களுக்கு தெளிவு படுத்த விரும்பு கிறோம்.

ஒப்பந்தம் 

அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றால் பூச்சி முருகன் அவர்கள் வழக்கை வாபஸ் பெற வேண்டும். அதன் பிறகு எஸ்.பி. சினிமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்கு நான் ஒத்துழைக்கிறேன் என்று கூறிக் கொள்கிறேன்.

காவல்துறை 

சிறந்த முறையில் நடந்த இந்த தேர்தலுக்கு காவல் துறை சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்தது. நீதியரசர் சிறந்த முறையில் ஜனநாயக முறையில் இந்த தேர்தலை நடத்தியதற்கு என் வாழ்த்துக்கள். 

பத்திரிக்கை சகோதரர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற அனைவருக்கும், விஷால் அவர்கள், பொருளாளர் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னார்கள் அந்த டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
காழ்ப்புணர்ச்சி 

ஏற்கனவே இருந்த காழ்ப்புணர்ச்சியை எல்லாம் மறந்துவிட்டு தேர்தலுக்கு முன்பு காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கிறது. அதை எல்லாம் மறந்து ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். 

ஏனென்றால் இந்த தேர்தலில் தான் முதல் முறையாக சகோதரத்துவத்தை இழக்கின்ற சூழல் உருவாகி அனைவரும் பிரியும் சூழலில் அனைவரும் ஒற்றுமைப்படாத சங்கமாக இருந்துவிடுமோ என்ற ஜயம் எல்லாம் இருந்தது.

உதவி 

நாசர் அவர்கள் என்னிடம் நீங்கள் எனக்கு உதவி செய்து இந்த சங்கத்தை சிறப்பாக நடத்த உதவ வேண்டும் என்று சொன்னார். நிச்சயமாக கலைக்குடும்பத்தில் நடிகனாகத் தான் எனது பயணம்.
கட்டிடம் 

இந்த கட்டிடத்தை முடித்துவிட்டு செல்ல வேண்டும் என்ற என்னை, இந்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்று இருந்திருந்தாலும் அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைவனாக நான் இருக்கும் போது சிறந்த ஒப்பந்தம் போடபட்டது. அதை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் நான் வந்திருந்தேன்.

வாழ்த்துக்கள் 

இந்த வெற்றி அவர்களுக்கு கிடைத்த வெற்றி. இதை நான் தோல்வியாக கருதவில்லை. வெற்றி, தோல்வி வரும் மறையும். தென்னிந்திய நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்க அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். 
காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அனைவரும் ஒற்றுமை யாக எப்படி செயல் படுவது என்பதை பார்க்க வேண்டும். அனைவ ருக்கும் வாழ்த்துக்கள் என்றார் சரத்குமார்.
Tags:
Privacy and cookie settings