விஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மை.. வருமான வரித்துறை அறிவிப்பு !

'நடிகர் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்தது உண்மைதான். அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம்' என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
 Income Tax dept confirms Vijay's tax evasion
நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா, கலைப்புலி தாணு, புலி தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோரின் 32 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. 

இதில் கணக்கில் வராத பலகோடி மதிப்புள்ள சொத்துகளின் ஆவணங்களை கைப்பற்றியதாக வருமான வரித்துறை தெரிவித்தது.மேலும் நடிகர் விஜய் தொடர்ந்து 5 ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கை சரியாகக் காட்டவில்லை என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த நடிகர் விஜய், முறையாக வரி செலுத்தி வரும் என் மனதைப் புண்படுத்திவிட்டார்கள் என்று குற்றம்சாட்டினார். 

இந்த நிலையில் விஜய்க்கு பதிலளிக்கும் வகையில் வருமான வரித்துறை அனுப்பியுள்ள விளக்கத்தில், "விஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மைதான். அதற்கான ஆவணங்களை மிக விரைவில் சமர்ப்பிக்க உள்ளோம்," என்று கூறியுள்ளது.
Tags:
Privacy and cookie settings