நடிகர் சங்கத் தேர்தல்: சிம்பு- விஷால் அடித்துக்கொள்வதற்கு நயன்தாராதான் கரணமாம்..?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், ஏற்கனவே, நடிகர் சங்க தலைவராக உள்ள சரத்குமார் ஒரு அணியாகவும், நடிகர் விஷால் தலைமையில் மற்றொரு அணியிரும் போட்டியிடுகின்றனர். 
 
தேர்தலுக்கான தேதி நெருங்கி வருவதால் இரு அணியினரும் வாக்குகளை சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சரத்குமார் அணியைச் சேர்ந்த ராதிகா, பாக்யராஜ், சிம்பு, மோகன்ராம், ஊர்வசி, பூர்ணிமா ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். 

அப்போது நடிகர் சிம்பு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்பத்தியுள்ளது. விஷால் தன் தனிப்பட்ட பிரச்சனைக்காக தான் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார், 

ஒன்றாக இருந்த எங்கள்  குடும்பத்தை அவர் பதவி ஆசைக்காக பிரித்து, தற்போது  நடுத்தெருவிற்கு கொண்டு வந்து விட்டார் என்று கோபமாக பேசினார். அதோடு சில இடங்களில் மரியாதை இல்லாமல் வாடா போடா என்று பேசிவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்   தற்போது சிம்புவிற்கு விஷால் மீதிருந்த பர்சனல் பகையை இப்படி திட்டி தீர்த்து விட்டார் என்கின்றனர் விசயம் அறிந்தவர்கள். சத்யம் படத்தில் விஷாலுடன் நயன்தாரா நடித்த போதே ஆரம்பித்து விட்டதாம் இருவருக்கும் இடையேயான புகைச்சல்.

நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டியில் பங்கேற்ற சிம்பு, நயன்தாரா விஷால் ஜோடியைப் பார்த்து கண் சிவந்து வெளியேறினாராம். அடுத்தநாளே நட்சத்திர கிரிக்கெட் அணியில் இருந்தும் வெளியேறிவிட்டாராம். ஆனால் பிரஸ்மீட்டில் கிரிக்கெட் டீமில் இருந்து வெளியேறியதற்கு வேறு காரணம் சொன்னார்.

இந்த பகைதான் இதுநாள் வரைக்கும் தீராத பகையாக நீடித்து வருகிறது. அதனால் தான் நீ யார் என் குடும்பத்தை பிரிப்பதற்கு என்று கேட்கும் அளவிற்கு வந்திருக்கிறது என்கின்றனர் சிலர். இதே சிசிஎல் பிரச்சினையில்தான் சரத்குமாருக்கும் விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்பட காரணம் என்கின்றனர்.

அதே நேரத்தில் விஷால் ரெட்டி என்று ராதிகா சொன்னதற்கு பதில் சொல்லியுள்ள விஷால், எனக்கு ராதிகா மேடம் மேல தனிப்பட்ட கோபம் இல்லீங்க. என்னைபோயி ‘விஷால் ரெட்டி’ என்று ராதிகா சொல்லி இருக்கிறார். 

நல்லது செய்யறதுக்கு சாதி, மதம்னு எந்த அடையாளமும் தேவை கிடையாதுங்க. நடிகர் சங்கத்துல சாதின்கிற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். முதல்ல ராதிகா மேடத்துக்கு ஒரு உண்மை தெரியணும். நம்ம நடிகர் சங்கத்தோட உண்மையான பேர் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’. 

அதிலேயே எல்லாம் அடங்கி இருக்குன்னு எல்லோருக்கும் தெளிவா தெரியும். அடுத்ததா என்னை வாடா போடா என்று பேசிய அந்த தம்பி சிம்புவுக்கு என்மேல என்ன கோபமோ? அவர் பாட்டுக்கு இஷ்டத்துக்கு என்னைப்பத்தி பேசினார்.

அவரோட பேச்சைக் கேட்டு எனக்கு சிம்பு தம்பிமேல கோபமே வரலீங்க. என்னைப்பத்தி வாய்க்கு வந்தமாதிரி இஷ்டத்துக்கு கேவலமா பேசின சிம்புவோட சிறப்புரைக்கு நன்றிங்க. ஏன்னா தம்பியோட பேச்சுக்கு பிறகுதான் பாண்டவர் அணியோட வெற்றி பக்கா பிரகாசமா தெரியுது. 
சாதாரணமா வெற்றிபெற இருந்த எங்க அணியை மாபெரும் வெற்றிபெற உதவின மேடம் ராதிகா, தம்பி சிம்புவோட இந்த பேச்சுக்கு ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டார் விஷால்.
Tags:
Privacy and cookie settings