பெங்களூருவில் ஆஸ்திரேலிய இளைஞர் தனது உடலில் இந்து கடவுளின் உருவப்படத்தை பச்சை குத்தி இருந்ததால் பாஜக நிர்வாகிகள் அவரை தாக்க முற்பட்டனர்.
இந்த விவகாரத்தில் போலீஸார் ஆஸ்திரேலிய இளைஞரை மிரட்டி மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரை சேர்ந்த மேத்யூ கார்டன் (21) தனது பள்ளிப் படிப்பை கொடைக்கானலில் படித்து முடித்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் சட்டம் பயின்று வரும் இவர் தனது கல்லூரி தோழி எமிலி காஸினோ (20) மற்றும் நண்பர்களுடன் கடந்த மாதம் சுற்றுலாவாக இந்தியா வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு வந்த மேத்யூ கார்டனின் நண்பர்கள் அங்குள்ள கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக இணைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை பிற்பகல் மேத்யூ தனது தோழி எமிலியுடன் எம்ஜி ரோட்டில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகி ரமேஷ் யாதவ் மேத்யூ-வின் காலில், கர்நாடகாவில் இந்துக் களால் பரவலாக வணங்கப்படும் எல்லம்மா (துர்க்கையின் வடிவம்) உருவத்தை பச்சை குத்தி இருப்பதை கண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் உடனடியாக தனது ஆதரவா ளர்களை வரவழைத்து மேத்யூ விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மேத்யூ கூறுகையில், “இந்து கடவுளின் உருவப் படத்தை காலில் பச்சைக் குத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிடில் தோலை உரித்து எடுப்போம் என மிரட்டினர். நடந்த சம்பவத்துக்காக மன்னிப்புக் கோரிய போதும் அதை ஏற்காமல் என்னை தாக்க முயற்சித்தனர். என்னையும் எனது தோழியையும் தகாத வார்த்தை களில் திட்டினர்.
இதனால் உடனடியாக போலீ சாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து எங்களை அசோக் நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது போலீஸார், ' இந்தியாவில் இவ்வாறு மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காலில் கடவுளின் படத்தை பச்சை குத்தக்கூடாது.
கடவுளின் படத்தை பச்சைக் குத்தி உள்ளூர்க்காரர்களின் மனதை புண்படுத்திய காரணத்துக்காக மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தர நிர்பந்தம் செய்தனர். அப்போது நான் 3 ஆண்டுகளுக்கு முன்பு இதை ஆஸ்திரேலியாவில் பச்சைக் குத்தினேன்.
எனது முதுகிலும் விநாயகர் படத்தை பச்சைக் குத்தியுள்ளேன். இந்து கடவுளின் மீது எனக்கு மிகுந்த பக்தியுள்ளது. இந்தியா முழுவதும் சுற்றி திரிந்தபோதும் இதனை அவமதித்ததாக யாரும் என்னை மிரட்டவில்லை.
எனது தரப்பு நியாயத்தை போலீஸாரும் உள்ளூர்காரர்களும் ஏற்க மறுத்து தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருந்தனர். இதனால் எனது தோழி எமிலி அழுததால் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தேன்.
நான் மிகவும் நேசிக்கும் இந்தியாவில் இத்தகைய விரும்ப தகாத சம்பவம் நடந்துள்ளதால் வருத்தமாக உள்ளது. எனவே உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்துள் ளேன்''என்றார்.
இது தொடர்பாக பாஜக நிர்வாகி ரமேஷ் யாதவ் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்தியா வின் பெருமையை நிலைநாட்டி வருகிறார்.
ஆனால் ஆஸ்திரேலி யாவை சேர்ந்த இளைஞர் இந்து கடவுளின் உருவப்படத்தை காலில் பச்சைக் குத்தி, இந்தியாவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்து கடவுளுக்கும் இந்தியா வுக்கும் அவமரியாதை செய்தவர் களை கடுமையாக தண்டிக்க வேண்டும்' 'என்றார்.
இதனிடையே பெங்களூரு மாநகர காவல் துணை ஆணையர் சந்தீப் பாட்டீல்,'' இந்த விவகாரம் சுமூகமாக முடிக்கப்பட்டுள்ளது. இதனை யாரும் பெரிதுபடுத்தக் கூடாது''என்றார்.
சமூக ஆர்வலர்கள் கண்டனம்
ஆஸ்திரேலிய இளைஞரை மிரட்டிய பாஜக நிர்வாகிகள் மீதும் போலீஸார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனங்களை பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் மூத்த கன்னட எழுத்தாளர் மருளு சித்தப்பா, “பாஜகவினரின் இத்தகைய செயல்பாடு சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தியுள்ளது”