அனிருத் பிறந்தநாளில் வெளியாகிறது வேதாளம்!

1 minute read
அனிருத் பிறந்தநாளில் வேதாளம் படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.
 
மேலும் வேதாளம் படத்தின் டீசர் இணைய உலகில் பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறது. இந்நிலையில் அடுத்தகட்டமாக படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

இதனை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் "பாடல்களுக்கு நடனம் ஆடத் தயாராக இருங்கள் எனது பிறந்த நாளில் பாடல்கள் வெளியாகின்றன" என்று கூறியிருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பர்ஸ்ட் லுக், பெயர் மற்றும் டீசர் ஆகிய அனைத்தையும் வியாழக்கிழமை வெளியிட்டு வந்த வேதாளம் குழுவினர் முதன் முறையாக அந்த செண்டிமெண்டை உடைத்து பாடல்களை வெள்ளிக்கிழமை அன்று வெளியிடுகின்றனர்.

வேதாளத்தில் அஜீத்துடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின், சூரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. பாடல்கள் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அஜீத் ரசிகர்கள் தற்போது உற்சாகத்துடன் பாடல்களை வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings